பாபநாசம் தலையணையில் மூழ்கி கேரள வாலிபர் பலி- உடல் மீட்பு
விகேபுரம்: பாபநாசம் தலையணையில் நண்பர்களை காப்பாற்ற சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள மன்னாராவை சேர்ந்தவர் ஹரி. இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஹரி அவருடன் வேலை பார்க்கும் நண்பர்கள் 9 பேர் நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு சுற்றுலா வந்தனர்.
அங்கு அனைவரும் தலையணையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஹரியின் நண்பர்களான அனிஷ் திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற ஹரியும் ஆழமான பகுதிக்கு சென்றார்.
இதை பார்த்த மற்ற நண்பர்கள் அனீஷை உயிருடன் மீட்டனர். ஆனால் அவரை காப்பாற்ற சென்ற ஹரி மாயமானார். நீண்ட நேரம் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து உடனடியாக அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஹரியின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து விகேபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications