ஹைய்யா என் மனைவி ஓடி போயிட்டா.. 250 நண்பர்களுக்கு போதை பார்ட்டி வைத்த கேரளத்து "லட்சுமிபதி"!
கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் வேறு ஒருவருடன் மனைவி ஓடி போனதை அடுத்து ஷாக் ஆகாமல் 250 நண்பர்களை அழைத்து மதுவிருந்து வைத்து கணவர் ஆடிபாடி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் லட்சுமிபதி கேரக்டரில் நடித்திருப்பார் ஜனகராஜ். அவர் வி.கே ராமசாமியிடம் பணியாற்றி வருவார். இந்த நிலையில் அவருக்கு ஏற்கெனவே நிறைய குழந்தைகள் இருக்க, பிரசவத்திற்காக குழந்தைகளை அழைத்து கொண்டு அவருடைய மனைவி தாய்வீட்டிற்கு செல்வார்.

அவரை பிரிய மனமில்லாதவர் போல் ஜனகராஜ் அழுது ஆர்ப்பாட்டம் செய்வார். இதையடுத்து பேருந்து கிளம்பியதும், ஜனகராஜ் எம் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா என சாலையிலேயே டான்ஸ் ஆடுவார். இந்த சந்தோஷத்தில் வி.கே. ராமசாமி வீட்டில் அமர்ந்து ஆபாச படங்களை பார்ப்பார்.
அந்த நேரத்தில் யாரோ கதவு தட்ட ஒவ்வொரு முறையும் ஜனகராஜ் கதவை திறந்து பார்க்க ஒரு பொடியனுக்கு ரூ 10 கொடுத்து அனுப்புவார். ஒரு முறை கதவை தட்டும்போது ஜனகராஜின் குடும்பத்தினர் வந்திருப்பார். அப்போது கதவை திறந்தது வி.கே.ராமசாமி., குழந்தைகள் வீடியோ ஓடுதுனு ஓடி வர அதை மறைக்க முடியாமல் விகே ராமசாமியும் ஜனகராஜும் அவதிப்பட அந்த காட்சியே சிரிப்பாக இருக்கும்.
அதை விடுங்க! நிஜத்தில் ஒரு கேரளத்து சேட்டன் தன் மனைவி வீட்டை விட்டு யாருடனோ ஓடி போனதற்கு மிகப்பெரிய பார்ட்டி வைத்து அசத்தி விட்டாராம். கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியை சேர்ந்தவரின் மனைவி கள்ளக்காதலுடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து கணவன்-மனைவி இடையே நீண்ட காலமாக பிரச்சினை வந்த நிலையில் மனைவி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இதனால் கணவர் நிம்மதி அடைந்து தனது வீட்டிற்கு 250 நண்பர்களை அழைத்தார். அவர்களுக்கு பிரியாணி விருந்து படைத்ததுடன் மதுபானங்களை வாங்கி கொடுத்தார். மது குடித்துவிட்டு நண்பர்கள் பாட்டு போட்டு ஆட்டம் போட அவர்களுடன் அந்த கணவரும் சேர்ந்து கொண்டு நடனமாடும் காட்சிகள் வைரலாகி வருகிறது. குடித்துவிட்டு தினம் வந்து மனைவியிடம் சண்டை போட்டதால்தான் அவர் வேறுஒருவருடன் ஓடி விட்டார் என்றும் கூறுகிறார்கள்.
இவர்கள் நடிகர் மோகன்லால் நடித்த நரேன் திரைப்படத்தில் இருந்து வெளியான பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோவை எடுத்தது யார் என தெரியவில்லை. இந்த வீடியோவுக்கு ஏராளமானோர் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications