ஓடும் ரயிலில் தமிழ் திரைப்பட நடிகைக்கு பாலியல் தொல்லை!
Recommended Video

திருவனந்தபுரம்: நடிகை சனுஷா ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சனுஷா. இவர் வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
நடிகை பாலியல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, மலையாள முன்னணி நடிகர் திலீப் கதாநாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்துள்ளார்.

ரேணிகுண்டா நடிகை
தமிழில் ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன், உள்ளிட்ட தமிழ் படங்களில் சனுஷா நடித்துள்ளார். இதன் மூலம் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறியுள்ளார் இவர். இவர் சம்பவத்தன்று, கேரள மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.

சீண்டல்
அப்போது ஓடும் ரயிலில் வைத்து, சனுஷாவை ஒரு இளைஞர் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். பக்கத்து பெர்த்தில் படுத்திருந்தவர் அதிகாலை நேரத்தில் சனுஷாவை நெருங்கி தனது கைகளை படரவிட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சனுஷா அவரது கைகளை பிடித்துக் கொண்டு கத்தி கூச்சலிட்டார். மேலும் டிடிஆரிடம் புகார் அளித்தார்.

போலீசார் நடவடிக்கை
இதையடுத்து டிடிஆர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் பாலியியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்த ஆண்டோ போஸ் என்பவர் என்பது தெரியவந்துள்ளது.

அமலாபால் புகார்
ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மற்றொரு நடிகை இதுபோன்ற பிரச்சினையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications