கேரளாவில் பாகுபலி போல துதிக்கையில் ஏற முயன்ற நபர் - தூக்கி அடித்த யானை- வீடியோ
கேரளாவில் பாகுபலி படம் போல யானை மீது ஏறப்போன பாகனை கோபத்தோடு முட்டி தள்ளியது யானை.
Recommended Video

கொல்லம் : பாகுபலி படத்தில் வருவது போல யானை மீது ஏற சென்ற பாகனை கோபத்தோடு தூக்கி அடித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள கரிமன்னூர் என்னும் இடத்தில் ஒருவர் தான் வளர்த்து வரும் யானைக்கு வாழைப்பழத்தை கொடுத்து கொண்டிருந்தார். அதை அவரது நண்பர் பேஸ்புக்கில் லைவ் செய்தார்.
அந்த லைவ் வீடியோவில் அடுத்து வந்த காட்சிகளைப் பார்த்தவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

விபரீத முயற்சி
அந்த இளைஞர் தன்னிடம் உள்ள கடைசி வாழைப்பழத்தை யானையிடம் கொடுப்பது போல் பாவனை காட்டிவிட்டு பாகுபலி படத்தில் வருவது போல தந்தங்களை பிடித்து தும்பிக்கையை மிதித்து யானை மீது ஏற முயற்சித்துள்ளார்.

தூக்கி அடித்த யானை
இது ஆபத்து அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அந்த நபரின் தந்தை எச்சரித்தார். ஆனால் அந்த நபரோ கேட்காமல் மீண்டும் முயற்சித்தபோது, கோபம் கொண்ட அந்த யானை தூக்கி அடித்தது. இதில் பாகுபலியாக முயற்சித்த நபர் படுகாயமடைந்தார்.

ஃபேஸ்புக்கில் லைவ்
இந்த காட்சிகள் ஃபேஸ்புக்கில் லைவ் ஆக ஒளிபரப்பானது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகுபலி பிரபாஸ்
பாகுபலி பிரபாஸ் ஆக முயற்சி செய்து படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் அந்த நபர். கிராபிக்ஸ் காட்சியை எல்லாம் நிஜமென்று நம்பினால் இப்படித்தான் கட்டு போட்டு படுத்திருக்க வேண்டும்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications