முல்லைப் பெரியாறில் அணைகட்டும் முயற்சி மீண்டும் தொடங்கப்படும்.. கேரளா தொடர்ந்து பிடிவாதம்
டெல்லி : முல்லை பெரியாறு அணைபகுதியில் புதிய அணை கட்ட மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கேரள சுற்றுச்சூழல் அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்டும் முடிவுக்கு தமிழக கஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எனினும் முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கேரளா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுற்றுச்சூழல் அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன், புதிய அணை கட்டுவதற்கான பரிந்துரைகள் மத்திய அமைச்சகத்திற்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
மக்களின் நலனுக்காகத் தான் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதாக கூறிய திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன், இவ்விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது 100 ஆண்டுக்கு மேல் பழமையான முல்லை பெரியாறு அணையால் ,அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கேரள அரசு தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications