நீட் தேர்வு: தமிழக மாணவர்கள், பெற்றோர்கள் ஓய்வெடுக்க மசூதியில் இடம் கொடுத்த கேரள இஸ்லாமியர்கள்!
நீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் மசூதிகளில் இடமளித்துள்ளனர்.
Recommended Video

திருவனந்தபுரம்: நீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் மசூதிகளில் இடமளித்துள்ளனர்.
தமிழகத்தில் போதுமான நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததால் தமிழக மாணவர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. 5 சிறப்பு பேருந்துகள் மூலம் நெல்லையில் இருந்து தமிழக மாணவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கி ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தங்களின் மசூதிகளில் இடமளித்துள்ளனர்.
இதேபோல் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையம் செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது என கேரள சிஐடியு, சிபிஎம் ஆட்டோ தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications