2 குழந்தைகளின் தாயுடன் கள்ளக்காதல்.. அந்தரங்கத்தை பேஸ்புக்கில் லைவ் செய்து சிக்கிய கேரள வாலிபர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கள்ளக்காதலியை பழிவாங்க பாலியல் உறவை பேஸ்புக் லைவில் ஒளிப்பரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜோடி ஒன்றின் பாலியல் காட்சிகள் கடந்த சில நாட்களாக பேஸ்புக் லைவ் வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அடிமாலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் லுனு என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாககூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். மேலும் அந்தக் காட்சிகளை ஃபேஸ்புக் லைவில் ஒளிப்பரப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாலியல் காட்சிகள் வெளியீடு

பாலியல் காட்சிகள் வெளியீடு

இதுகுறித்து லுனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பாலியல் காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட லுனுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஏற்கனவே திருமணமானவர்

ஏற்கனவே திருமணமானவர்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்தப் பெண் லுனுவுடன் தொடர்பு வைத்திருந்ததும் அம்பலமாகியுள்ளது.

பழிவாங்கும் நோக்கில்..

பழிவாங்கும் நோக்கில்..

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கும் லுனுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழிவாங்கும் நோக்கில் அவர் பாலியல் காட்சிகளை வெளியிட்டாரா அல்லது வீடியோ எடுக்க நினைத்து அது லைவ்வாக ஒளிப்பரப்பானது தெரியாமல் போனதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீடியோவை நீக்க கோரிக்கை

வீடியோவை நீக்க கோரிக்கை

பாலியல் காட்சிகள் லைவ்வாக வெளியானதால் வெளியே தலைக்காட்ட முடியவில்லை என கூறியுள்ள அந்தப் பெண், இதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near in Kerala a pair's sleazy video telecast in facebook live. The woman who suffered due to this complaint to police. Police have arrested the person.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற