கேரளாவிலிருந்து திடீர் எஸ்கேப்.. அமித்ஷாவை கலாய்க்கும் மலையாளிகள்.. வைரலான 'அமித்தாதி' ஹேஷ்டேக்!
பாஜகவின் மக்கள் பாதுகாப்பு பேரணியில் இருந்து அமித்ஷா வெளியேறியதை அடுத்து கேரள மக்கள் அமித்தாதி என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அவரைக் கலாய்த்தனர்.
திருவனந்தபுரம்: பாஜக கேரள மாநிலத்தில் 'மக்கள் பாதுகாப்பு பேரணி' என்ற பெயரில் நீண்ட பேரணி ஒன்றை நடத்தி வருகிறது. பாஜகவின் பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தப் பேரணியை தொடங்கி வைத்த அமித்ஷா, திடீர் என்று பாதியில் பேரணியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து கேரள மக்கள் 'அமித்தாதி' என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அவர் வெளியேறியதைக் கலாய்த்து வருகின்றனர்.
இது இணையத்தில் நேற்று வைரல் ஆனது. நேற்றில் இருந்து தொடர்ச்சியாக இதில் பலர் போஸ்ட் செய்து வருகின்றார். இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் சில மணிநேரம் முதல் இடத்தில் இருந்தது.

கேரளாவில் பேரணி
உத்திரபிரதேச முதல்வர் யோகி, பிஜேபி தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து கேரளா மாநிலத்தில் ``மக்கள் பாதுகாப்பு பேரணி`` என்ற தலைப்பில் அணிவகுப்பு நடத்தி வந்தனர். கேரளாவில் பாஜகவின் வலிமையை காட்டும் விதத்தில் இந்தப் பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தது பாஜக. இந்தப் பேரணியில் நிறைய பாஜக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அமித் ஷா வெளியேறினார்
ஒரு வாரம் நடக்கும் இந்தப் பேரணியில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் திடீர் என்று அமித் ஷா விலகினார். கேரள மக்கள் போதிய அளவுக்கு பேரணியைக் கண்டுகொள்ளாததால் அமித்ஷா இந்த திடீர் முடிவை எடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது அந்தக் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
|
ட்ரெண்ட் ஆன அமித்தாதி
இந்த நிலையில் பாதியில் வெளியேறிய கேரள மக்கள் அமித்ஷாவையும் , உத்திர பிரதேச முதல்வர யோகி ஆதித்யாவையும் கலாய்க்கத் தொடங்கினர். இதற்காக டிவிட்டரில் `அமித்தாதி` என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கிய கேரள மக்கள் நேற்று காலையில் இருந்து விடாமல் அதில் போஸ்ட் செய்து வருகின்றனர். அமித்ஷாவில் உள்ள 'அமித்' என்ற வார்த்தையையும், யோகி ஆதித்யாவில் உள்ள 'ஆதி' என்ற வார்த்தையையும் இணைத்து இந்த புதிய அமித்தாதி வார்த்தையை உருவாக்கியுள்ளனர்.
|
அதன் அர்த்தம்
கேரளா மக்கள் இந்த புதிய வார்த்தைக்கு காமெடியான பொருள் ஒன்றையும் வழங்கி உள்ளனர். அதன்படி அமித்தாதி என்றால் பாதியில் வெளியேறுதல் என்று அர்த்தம் கொடுத்துள்ளனர். அமித்ஷா பாதியில் வெளியேறியதை அடுத்து இவ்வாறு அர்த்தம் வழங்க முடிவு எடுத்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications