தாக்குதல் பீதி.. சபரிமலை, பம்பையிலிருந்து வெளியேறுங்கள்.. பத்திரிகையாளர்களுக்கு கேரள போலீஸ் உத்தரவு
Recommended Video

பம்பை: சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் அனைவரும் வெளியேறும்படி கேரள காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த வாரம் திறக்கப்பட்டது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதித்து தீர்ப்பு வழங்கிய பிறகு முதல் முறையாக நடை திறக்கப்பட்டதால், பெண்களும் கோயிலுக்கு வரக்கூடும் என்ற யூகத்தில், அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஊடகவியலாளர்களும் சபரிமலையை நோக்கி சாரை சாரையாக சென்றிருந்தனர். எதிர்பார்த்தது போலவே சில பெண்கள் சபரிமலைக்கு வந்து இருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

கல்வீச்சு
சில இடங்களில் கல்வீச்சு நடைபெற்றது. ஆங்கில செய்தி டிவி சேனல்கள் சபரிமலைக்கு பெண்களை வருவதற்காக தூண்டிவிடுகின்றன என்று போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதேபோன்று சபரிமலையில் செய்தி சேகரிப்பதற்காக ஆங்கில டிவி சேனல்கள் பெரும்பாலும் பெண்களையே அனுப்பியிருந்தனர். எனவே அவர்களும் கல்வீச்சுத் தாக்குதலுக்கு தப்பவில்லை.
[சின்மயியிடம் கோபம் இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது.. ஆனால் ஆதாரமும் முக்கியமாச்சே! ]

வைரல் வீடியோ
இந்த நிலையில் கேரள வாலிபர் ஒருவர் நேற்று வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி, ஆசிரியரை அவர் மிரட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது, உங்கள் பத்திரிகையாளர்களைதான் அடித்து விரட்டி உள்ளோம். நீங்கள் சபரிமலைக்கு வந்தால் உங்களையும் அடிப்போம் என்று அந்த வாலிபர் கூறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

வெளியேற
இந்த நிலையில் சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் உள்ள செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை, கேரள அரசுக்கு எச்சரித்துள்ளது, உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து அனைத்து பத்திரிகையாளர்கள் வெளியேற வேண்டும் என்று கேரள காவல்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.

இன்று நடை சாத்தப்படுகிறது
ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்து இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்ட உள்ளது. இனிமேல் மண்டல பூஜைக்காக, கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications