கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை ஜூன் 1 முதல் ரூ.1 குறைப்பு.. மாநில அரசு நடவடிக்கை!
கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 1 குறைக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்: கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ரூ.1 குறைக்கப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையால் கடந்த 15 நாட்களில் மிகப் பெரும் விலையேற்றத்தை அடைந்துள்ளது. மொத்தமாக இந்த 15 நாட்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 3.8-ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3.38 காசுகளும் உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றங்கள் உள்ளூர் வரி அல்லது வாட் வரிக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. மெட்ரோ மற்றும் மாநில தலைநகர்களிலேயே டெல்லியில்தான் பெட்ரோல் டீசல் விலை குறைவு ஆகும்.
எனினும் இன்றைய தினம் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது. எவ்வளவு என்று பார்த்தால் வெறும் ஒரு பைசா மட்டுமே. ஏறும் போது ரூபாயிலும், இறங்கும்போது பைசாவிலும் இறங்குவது வாடிக்கையாகவே உள்ளது.
இந்த விலையேற்றத்தால் மக்கள் துயரம் அடைந்து வரும் நிலையில் கேரள அரசோ பெட்ரோல் டீசல் விலையில் ரூ. 1 குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலையை குறைத்த முதல் மாநிலம் என்ற பெருமையை பெறுகிறது கேரளா.
இந்த விலை குறைப்பு வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஜூன்1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
-
பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு.. சென்னையில் இன்று புதிய உச்சம் தொட்டது.. எவ்வளவு? -
பூமிக்கு அடியில் ஒளிந்திருக்கும் பொக்கிஷம்.. இந்தியாவை மாற்றப்போகும்.. மோடியின் மெகா திட்டம் -
திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி! -
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
கன்னாபின்னாவென உயர்வு.. பெட்ரோல் விலை அதிகமென சிஎன்ஜி கார் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! -
பட்ஜெட்டில் துண்டு போடும் பெட்ரோல் விலை.. இந்தியாவிலேயே உச்சம் எங்கு தெரியுமா? சென்னைக்கு எந்த இடம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications