முல்லைப் பெரியாறு: புதிய அணை கட்ட அனுமதி கோரி கேரளா கடிதம்! மத்திய அரசுக்கு அனுப்பியது!!
டெல்லி: முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி கேரளா அடாவடித்தனமாக அணை கட்டியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள அரசின் ஆய்வு மற்றும் வடிவமைப்புத்துறையின் தலைமை பொறியாளர் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் தட்பவெப்ப நிலை மாறுதல் அமைச்சகத்தின் செயலாளருக்கு கடந்த 11-ந் தேதி அனுப்பிய கடித விவரம்:

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 120 ஆண்டுகள் ஆகின்றன. 1895-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே கேரள அரசு, தற்போதுள்ள அணைக்கட்டுக்கு 366 மீட்டர் கீழ்ப்பகுதியில் முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே தேவையான ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு மற்றொரு புதிய அணையை கட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளது.
தமிழகத்துக்கு குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் தொடர்ச்சியாக கிடைத்து வருகிறது. தமிழக பகுதியை சேர்ந்த விவசாயிகள் இதனை பெரிதும் நம்பியிருக்கின்றனர். எனவே, அணையின் கீழ்படுகையில் வசிக்கும் மக்களின் உயிர்கள் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் நோக்கிலும், தமிழகத்துக்கு தொடர்ச்சியாக தண்ணீரை வழங்கும் நோக்கிலும் புதிய அணையை கட்டுவதற்கான தேவை ஏற்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சர்வேக்கள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் புதிய அணையின் வடிவமைப்பு மற்றும் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு உள்ளது. புதிய அணையை கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்குவது குறித்து மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
தேவையான சுற்றுச்சூழல் ஆய்வு செய்வது குறித்து தகுதியான நிறுவனங்கள் கேரள அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு தேர்ந்தெடுத்துள்ள நிறுவனத்துக்கான திட்டப்பணி நிபந்தனைகள் இத்துடன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திட்டப்பணி நிபந்தனைகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications