பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: கேரளாவில் பந்த் - லாரி, ஆட்டோக்கள் நிறுத்தம்
பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
Recommended Video

திருவனந்தபுரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் இன்று 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 6 மணிமுதல் எந்த வாகனமும் இயக்கப்படவில்லை.
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் லிட்டர் ரூ.75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 64 ரூபாயை தொட்டு விட்டது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

இதனை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு , ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என். டி.யு.சி உள்பட பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. இன்று மாலை 6 மணி வரை கேரளாவில் தனியார் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்ட எந்த வாகனமும் இயக்கப்படவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். இரு சக்கர வாகனங்களை ஊர்வலமாக தள்ளி சென்றும் அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் லாரிகள், வாகனங்கள், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு பிறகே இந்த வாகனங்கள் கேரளாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications