கிண்டல் செய்த மகனை கொலை செய்த தாய்.. தீ வைத்து எரித்த கொடூரம்!
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் மகனை எரித்து கொலை செய்து இருக்கிறார்.
Recommended Video

கொல்லம்: கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் மகனை எரித்து கொலை செய்து இருக்கிறார். சாதாரணமாக கிண்டல் செய்த காரணத்திற்காக இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கிறது.
இந்த கொலையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்து இருக்கிறது. மிகவும் சாமர்த்தியமாக அந்த பெண் இந்த கொலையை செய்து இருக்கிறார்.
இந்த பெண் கொடுத்த வாக்குமூலம் போலீசை நடுங்க செய்துள்ளது. தற்போது இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

மகனை காணவில்லை
கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா. 43 வயது நிரம்பிய இவர் நேற்று தன் கணவனுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று இருக்கிறார். அங்கு 14 வயது நிரம்பிய தன்னுடைய மகனை காணவில்லை என்று புகார் அளித்து உள்ளார். கடந்த 24 மணி நேரமாக அவன் எங்கே சென்றான் என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணை
போலீஸ் இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்தது. ஆனால் எவ்வளவு தேடியும் அந்த சிறுவன் குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனவே போலீஸ் அந்த சிறுவனின் தாயிடம் விசாரணையை தொடங்கியது. ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் முன்னுக்கு பின் முரணான தகவலை கொடுத்து இருக்கிறார். இதனால் போலீசின் சந்தேகம் அதிகம் ஆகியுள்ளது.

உண்மை
அந்த பெண்ணின் கையில் பெரிய தீ காயம் ஒன்று இருந்திருக்கிறது. இதற்கு விளக்கம் கேட்டதற்கு அந்த பெண் பதில் சொல்ல தெரியாமல் குழம்பிப் போய் உள்ளார். இதை அடுத்து போலீஸ் விசாரணையை தீவிர படுத்தியது. இதனால் போலீசிடம் அந்தப் பெண் கொலை செய்த உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

காரணம் என்ன
அந்த சிறுவனுக்கும் ஜெயாவிற்கு இடையில் ஏற்பட்ட சிறிய சண்டையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த சிறுவன் ஜெயாவை கிண்டல் செய்து இருக்கிறான். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த பெண் அவனை கொலை செய்து இருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்
அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவர் கணவன் கூறியுள்ளார். அந்த சிறுவனை இந்த பெண் தீ வைத்து கொலை செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருந்து 200 மீட்டர் தள்ளி இருக்கும் இடத்திற்கு இழுத்து சென்று புதைத்து உள்ளார். பின் வீட்டிற்கு வந்து சமையல் வேலைகளை கவனித்து இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications