"ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையா".. தாயின் மனதை குளிர வைத்த மகன்.. கேரளாவை உலுக்கிய கோகுல்!
தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்ததற்காக மகனுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது
Recommended Video
கொல்லம்: "ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையா" என்று ரத்தம் சொட்ட சொட்ட நின்ற தாயை பார்த்து பதறிய சிறுவன்தான் கோகுல்.. தனக்காகவே வாழ்வை அர்ப்பணித்த அந்த தாய்க்கு 2-வது கல்யாணம் செய்து அனைத்து தரப்பு மக்களிடம் சபாஷ் வாங்கி வருகிறார் மகன் கோகுல்!
கேரள மாநிலம் கொல்லம் அருகே பள்ளிமோன் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர்கள்தான் கோகுலும் அவரது அம்மாவும்.
அம்மாவும், அப்பாவும் போட்டுக்கொண்ட சண்டையை பார்த்தே வளர்ந்தான் சிறுவன் கோகுல். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், கணவனை பிரிந்தார் மனைவி. கூடவே கோகுலையும் அழைத்து கொண்டு வந்துவிட்டார். விவாகரத்தும் பெற்றுவிட்டனர்! அப்போது கோகுல் 10-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.

தேவையா?
15 வயதில் மனதில் நின்றுவிட்ட சம்பவம்தான் அது. அப்பாவுடன் ஏற்பட்ட தகராறில், ரத்தம் சொட்ட சொட்ட வந்து நின்ற அம்மாவை பார்த்து கேட்டான் "ம்மா.. இதெல்லாம் உனக்கு தேவையாம்மா?"என்று. "இதெல்லாம் உன் ஒருத்தனுக்காகத்தான்.. அதனாலதான் பொறுத்துக்கிறேன்" என்று அம்மா சொன்ன வார்த்தை பதிந்துவிட்டது கோகுலுக்கு.

2-வது திருமணம்
வருடங்கள் உருண்டோடியது.. இப்போது கோகுலுக்கு 23 வயதாகிறது.. டீச்சராக வேலை பார்த்த அம்மா, தனக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தமைக்கு ஏதாவது செய்ய நினைத்தார் கோகுல். 2-வது திருமணம் பற்றி பேச்சை எடுத்துள்ளார்.

சம்மதம்
ஆனால் அம்மா அதற்கு எடுத்த எடுப்பிலேயே முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார். இறுதிவரை முயன்ற கோகுல், கடைசியில் 2-வது கல்யாணத்துக்கு அம்மாவை சம்மதிக்க வைத்துவிட்டார். தாயுடன் படித்த நண்பரையே கல்யாணம் செய்து வைத்துள்ளார்.

துணிச்சல்
2-வது கல்யாணமாச்சே.. ஊர், உலகம் என்ன சொல்லும், இந்த வயசில கல்யாணமா.. என்ற இதுபோன்ற கேள்விகளை தூக்கி எறிந்தார் கோகுல். அப்பட்டமாக, தைரியமா, உலகத்துக்கே தெரியும்படி கல்யாணம் செய்துள்ளார்.

வைரல் பதிவு
"திருமண வாழ்த்துக்கள் அம்மா" என்று மனசார வாழ்த்து சொல்லி, தம்பதி போட்டோவை இணையத்தில் பதிவிட செய்தார். சும்மா சொல்லக்கூடாது.. கோகுலின் நிஜ மனசை ஆயிரக்கணக்கானோர் பாராட்டி வருகின்றனர்.. அவரது உணர்வுகளை புரிந்து கொண்டு மதிப்பளிப்பதால்தான், நிமிடத்துக்கு நிமிடம், கோகுலின் பதிவுகள் ஷேர்கள்.. லைக்குகள் என குவிந்து வருகின்றன!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications