கேரளாவில் மதுக்கடைகள், பார்களுக்கு ஞாயிறு விடுமுறை... இன்று முதல் அமல்!

கேரளாவில் வரும் 10 ஆண்டுகளுக்குள் பூரண மதுவிலக்கை அமல் படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி, ஆண்டு தோறும் பத்து பத்து சதவீதமாக மது விற்பனையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், கேரளாவில் புதிய மது பார்களுக்கு லைசென்சு வழங்கப்பட வில்லை. மேலும் 418 மது பார்களுக்கான லைசென்சு ரத்து செய்யப்பட்டு மது பார்களும் மூடப்பட்டன. காந்தி ஜெயந்தி தினமான கடந்த 2-ந் தேதி கேரளாவில் 10 சதவீத அரசு மதுக்கடைகள் மற்றும் மது பார்கள் மூடப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மது கடைகள், பார்களுக்கு விடுமுறை விட வேண்டும் என்றும் கேரள அரசு அறிவித்திருந்தது.
இத்திட்டம் இன்று முதல் கேரளாவில் அமலுக்கு வந்துள்ளது. இதனால் கேரளாவில் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன..
முன்னதாக ஞாயிற்றுக் கிழமை மதுக்கடைகளை மூடுவதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் மதுக்கடைகள், பார்களை ஞாயிற்றுக்கிழமை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்ததை தொடர்ந்து அவர்கள் மது பார்களை மூட சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications