லட்டு போல வெற்றியை தேடிக் கொடுத்த “லட்லி யோஜனா”.. பாஜகவின் பிரமாண்ட வெற்றிக்கு இதுதான் காரணமாம்!
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், பாஜகவின் இந்த வெற்றிக்கான காரணங்கள் குறித்து அலசப்பட்டு வருகின்றன.
மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 17-ஆம் தேதி நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 116 இடங்கள் பெறவேண்டும். இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, 161 இடங்களில் பாஜகவும், 66 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை 20 ஆண்டுகாலமாக பாஜக தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. இங்கு ஆளும் பாஜக 5ஆவது முறையாக ஆட்சியை தொடர தீவிர முயற்சி மேற்கொண்டது. இதை முறியடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக பிரசாரம் செய்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தன. இந்த நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது.
கடந்த 2018ல் காங்கிரஸ் - பாஜக இடையே பெரிய வித்தியாசம் காணப்படாத நிலையில், இந்த முறை பாஜக அலையில் காங்கிரஸ் காணாமல் போயுள்ளது. தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும், பெரும்பாலும் இழுபறி நிலை ஏற்படும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை மீறி, பாஜக அங்கு பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றிக்கு 3 பிரதான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
லட்லி பெஹ்னா யோஜனா திட்டம்: நம்ம ஊர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் போல, ம.பி தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்னதாக, கடந்த மார்ச் மாதம் மத்தியப் பிரதேசத்தின் 1.3 கோடி பெண்களுக்கு ரொக்கப் பணம் அளிக்கும் லட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்டில் ரூ.1,250 ஆக உயர்த்தப்பட்டது.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசும்போது, எனது ஆட்சியில் முதன்மையான திட்டம் 'லட்லி பெஹ்னா யோஜனா'.இதன்மூலம் பெண் பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் பணம் பெற்று வருகிறார்கள். இந்த தொகை படிப்படியாக ரூ.3,000 வரை உயர்த்தப்படும். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்தத் தொகை நிறுத்தப்படும்" என்றார்.
தேர்தல் முடிவில் எதிரொலிப்பு: மேலும், சுமார் 30 லட்சம் இளநிலைப் பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் படிகள் உயர்த்தப்பட்டன. அங்கன்வாடி ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.10,000லிருந்து ரூ.13,000 ஆக உயர்த்தப்பட்டது. மேலும், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவுரவ ஊதியத்தை மும்மடங்கு உயர்த்துவதாகவும் உறுதியளித்தார் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
மேலும், மாணவர்களுக்கு 135 கோடி ரூபாய் செலவில் இ-ஸ்கூட்டர்கள், 78,000 மாணவர்களுக்கு 196 கோடி ரூபாய் செலவில் மடிக்கணினிகள் வழங்குவதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார் சிவராஜ் சிங். இந்த திட்டங்கள், ம.பி மக்களிடையே பெரிய அளவில் கவனத்தைப் பெற்ற நிலையில், இது இந்த தேர்தல் முடிவில் எதிரொலித்திருப்பதாகத் தெரிகிறது.
கடைசி கட்ட பிரச்சாரங்கள்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி 15 பேரணிகளில் பங்கேற்று உரையாற்றினார். கூடுதலாக, பந்தேல்கண்டில் வெவ்வேறு நாட்களில், ம.பி முதல்வர் சவுஹானுடன் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹரியானா முதல்வர் மனோகர் கட்டார் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி ஆகியோர் பங்கேற்று கூட்டங்களில் பேசினர். பாஜக தலைவர்கள் ஒட்டுமொத்தமாக குவிந்து ம.பியில் ஆற்றிய பிரச்சாரம், பாஜகவுக்கு பலன் தந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்து கோவில்களுக்கு தாராளம்: கடைசி கட்டத்தில், இந்து கோவில்களுக்கு தாராளமாக நிதி அளிக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சல்கான்பூரில் உள்ள தேவிலோக், ஓர்ச்சாவில் உள்ள ராம்லோக், சித்ரகூட்டில் திவ்ய வனவாசி லோக் ஆகிய நான்கு கோயில்களை விரிவுபடுத்த ம.பி மாநில பாஜக அரசு ரூ.358 கோடி ஒதுக்கியது. சாகரில் உள்ள ரவிதாஸ் கோவில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியால் பூமிபூஜை செய்யப்பட்டது, இது 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.
14 ஆண்டுகளுக்கு முன்பு சிந்த்வாராவில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தால் கட்டப்பட்ட 101 அடி உயர அனுமன் சிலைக்கு போட்டியாக, பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த ஆகஸ்ட் மாதம் சிந்த்வாராவில் உள்ள பழைய அனுமன் கோயிலை ரூ.350 கோடியில் புதுப்பிக்கும் திட்டத்தை அறிவித்தார்.
இதுவும், ம.பியில் உள்ள பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை பாஜக நோக்கி திருப்பி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், மத்திய பிரதேசம், அதிகளவில் இந்து மக்கள் வசிக்கக்கூடிய மாநிலம். அதனால், சனாதன சர்ச்சையை ஒரு முக்கியப் பிரச்சனையாக அங்கு பாஜக முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications