5-ம் கட்ட வாக்குப் பதிவு: 51 தொகுதிகளில் பாஜகவுக்கு எத்தனை தேறும்?
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வரும் 51 தொகுதிகளில் கடந்த முறை பாஜக 41 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால் இம்முறை நிலைமை தலைகீழாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வரும் மாநிலங்கள்: பீகார் 5; ஜம்மு காஷ்மீர் 2; ஜார்க்கண்ட் 4; மத்திய பிரதேசம் 7; ராஜஸ்தான் 12; உத்தரப்பிரதேசம் 14; மேற்கு வங்கம் 7.

மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தவிர இதர மாநிலங்கள் அனைத்தும் இந்தி பேசும் மாநிலங்கள். 2014 லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளையும் அள்ளியது பாஜக. ஆனால் 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. இன்று ராஜஸ்தானில் 12 லோக்சபா தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் இன்று 7 லோக்சபா தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 2014 தேர்தலில் பாஜக இந்த 10-ல் 3 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. எஞ்சிய 7 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் பாஜக வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு சதவீத இடைவெளி என்பது 23.9%.
உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் சோனியா மற்றும் ராகுல் காந்தி போட்டியிடுகின்றனர். இத்தொகுதிகளில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கட்சிகள், காங்கிரஸுக்கு ஆதரவு அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் தொகுதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆனால் இத்தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. மேலும் ஜார்க்கண்ட், மத்திய பிரதேச மாநிலங்களில் அண்மைய சட்டசபை தேர்தலில் பாஜக கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications