கிட்னி கடத்தல் விவகாரம்.... விசாரணை வளையத்தில் டெல்லி அப்பல்லோ டாக்டர்கள்
டெல்லி: கிட்னி கடத்தல் விவகாரத்தில் டெல்லி இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
கிட்னி கடத்தல் கும்பல் டெல்லி அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் நடமாடுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிடைத்த அடிப்படையில் போலீஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு 6 பேரை கைது செய்தனர்.

இவர்களில் டெல்லி இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் ஒருவரும் சிக்கினார். ஆனால் இந்த கிட்னி கடத்தல் கும்பலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை கூறியிருந்தது. அத்துடன் போலீஸார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்தது.
இருப்பினும் கடத்தல் கும்பலின் போலி ஆவணங்களுக்கு ஒப்புதல் கொடுத்ததாக 3 அப்பல்லோ மருத்துவர்களை விசாரணை வளையத்துக்குள் டெல்லி போலீஸ் கொண்டு வந்துள்ளது. அதேபோல் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மேலும் 2 மூத்த மருத்துவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் இந்த கிட்னி கடத்தல் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நிர்வாகிகள் பலருக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஒட்டுமொத்த கிட்னி கடத்தல் கும்பலையும் கூண்டோடு கைது செய்ய 25 பேர் கொண்ட தனிப்படை ஒன்றையும் டெல்லி போலீசார் களத்தில் இறக்கியுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications