இந்தியா கேட் பகுதியில் தினமும் 3 குழந்தைகள் மாயம்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நாள் ஒன்றுக்கு மூன்று குழந்தைகள் காணாமல் போவதாக ஆய்வு ஓன்று அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் ராஜ்பத் புல்வெளி சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது. எனவே, இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்கள் அதிகளவில் தினந்தோறும் கூடுகின்றனர். விடுமுறை தினங்களில் மட்டும் இப்பகுதிக்கு சுமார் 10 ஆயிரம் பேர் வருகை தருவதாக கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் இப்பகுதியில் காணாமல் போன ஜான்வி என்ற 3 வயது எட்டு நாட்களுக்குப் பிறகு ஜனக்புரி என்ற பகுதியில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டார். இதையடுத்து இப்பகுதியில் காணாமல் போகும் குழந்தைகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அதில், தினந்தோறும் அப்பகுதியில் மூன்று குழந்தைகள் காணாமல் போவது தெரியவந்துள்ளது. இதனால், அங்கு பாதுகாப்பை பலப்படுத்த டெல்லி போலீசாரை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
பாதுகாப்பு அதிகரிப்பு...
மூன்று வயது சிறுமி மாயமாகி பின்னர் மீட்கப்பட்ட சம்பவத்தையடுத்து, இந்தியா கேட் மற்றும் ராஜ்பத் பகுதியை குற்றம் நிகழாத பாதுகாப்பு மிக்க பகுதியாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.
தரம் குறைந்த கண்காணிப்பு கேமராக்கள்...
இப்பகுதியில் தற்போது 40 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில் பதிவாகும் வீடியோவின் தரம் குறைவாக இருப்பதால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிரமம் உள்ளது.
புதிய கேமராக்கள்...
இவற்றை மாற்றியமைத்து தரமான 300 கேமராக்கள் நிறுவ திட்ட மிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிறு பொருட்கள் விற்கும் வணிகர்களுக்கு அடையாள அட்டை தரப்பட உள்ளது.
அடையாள அட்டை...
அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே இப்பகுதியில் பொருட்கள் விற்பனை செய்ய முடியும். அவர்களை நெருக்கமாக கண்காணிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பான பகுதியாகும்...
சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் நடமாட்டம் இருந்தால், அவர்களைப் பற்றி போலீஸாருக்கு தகவல் தருபவர்களாகவும் வணிகர்கள் இருப்பார்கள். இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தியா கேட் பகுதி மிகவும் பாதுகாப்பான பகுதியாக மாற்றப்படும்' என இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications