பெரும் சர்ச்சை.. பிரதமரை இப்படியா விமர்சிப்பது? காங்கிரஸ் தலைவர் பேச்சால் கொந்தளிக்கும் பாஜக!
போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியா, பிரதமர் நரேந்திர மோடியை கொல்லுமாறு பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா படேரியாவின் பேச்சால் கொந்தளித்து போயுள்ள பாஜகவினர், அவரை உடனடியாக கைது செய்யுமாறு பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தை பாஜக அரசியலாக்க முயல்வதாகவும் ராஜா படேரியா கூறியுள்ளார்.

மோடி மீது அதிகரிக்கும் விமர்சனங்கள்
சமீபகாலமாகவே, பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கு எதிர்க்கட்சித் தலைவர்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸும், ஆம் ஆத்மியும் மோடியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்தை பார்க்க முடிந்தது. உதாரணமாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை 'ராவணன்' எனக் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

ராஜா படேரியா கிளப்பிய சர்ச்சை
அந்த வகையில், தற்போது மீண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தரம் தாழ்ந்த விமர்சனத்தை மத்திய பிரதேச பாஜக தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். மத்திய பிரதேசத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ராஜா படேரியா. இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில், நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் ராஜா படேரியா உரையாற்றினார்.

"நரேந்திர மோடியை கொல்ல வேண்டும்"
அப்போது அவர், "பாஜக ஆட்சியில் அரசியல் சாசனத்தின் அனைத்து சட்டப்பிரிவுகளும் மீறப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினரும், தலித் சமூகத்தினரும் பாஜக ஆட்சியில் துன்பப்படுகின்றனர். இந்திய அரசியல் சாசனத்தை காக்க விரும்பினால், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், அரசியல் சாசனத்தை காக்க முடியாது" என ராஜா படேரியா பேசினார்.

கொந்தளிப்பில் பாஜக
இந்நிலையில், ராஜா படேரியாவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜா படேரியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, ராஜா படேரியா தனது பேச்சுக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், "பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே நான் அவ்வாறு பேசினேன். இதை வேண்டுமென்றே பாஜகவினர் அரசியலாக்கி வருகிறார்கள்" என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications