"கோட்சே தம்பிக்கு காட்டப்பட்ட கருணையை ஏன் ராஜீவ் கொலையாளிகளுக்குக் காட்டக் கூடாது...?"
டெல்லி: மகாத்மா காந்தியை விட பெரியவர் யாருமில்லை. அவரை விட மிகப் பெரியவர் யாரும் இல்லை. அப்படிப்பட்ட மகாத்மா காந்தியைக் கொன்ற வழக்கிலிருந்து நாதுராம் கோட்சேவின் தம்பியை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட். அப்படி இருக்கையில் அதே நியாயத்தை ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கும் ஏன் வழங்கக் கூடாது என்று தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி கேட்டுள்ளார்.
மகாத்மா காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சேவின் தம்பி விநாயக்ராம் கோட்சே மீது சதித் திட்ட புகார் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 1964ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தலைமை நீதிபதி தத்து தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், ராஜீவ் கொலையாளிகளான ராபர்ட் பயஸ், வி.ஸ்ரீஹரன், சாந்தன், ஜெயக்குமார், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில்தான் நேற்று இப்படி வாதிட்டார் திவிவேதி. அவரது வாத விவரம்:

காந்தியை விட யார் பெரியவர்
மாபெரும் தலைவரான மகாத்மா காந்தியை விட யாரும் உயர்ந்தவர் இல்லை. அவரை விட பெரியவர் யாரும் இல்லை. தேசத்தின் தந்தையாக போற்றப்படுபவர் காந்தி.

விநாயக் ராம் கோட்சேவுக்கு இரங்கினோமே
அப்படிப்பட்ட காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நாதுராம் கோட்சேவின் தம்பி விநாயக் ராம் கோட்சேவுக்கு இரக்கம் காட்டி அவரை விடுதலை செய்தது இதே சுப்ரீம் கோர்ட்.

16 ஆண்டுகளில் விடுதலை
விநாயக்ராம் கோட்சே 16 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். யாரும் அதை அப்போது கேள்வி கேட்கவில்லை, எதிர்க்கவில்லை. பிறகு ஏன் இவர்களை மட்டும் எதிர்க்க வேண்டும். ஏன் விடுவிக்கக் கூடாது.

கொலை செய்தது சரியில்லைதான்
இந்தத் தலைவர்கள் படுகொலை செய்யபப்ட்டதை நான் நியாயப்படுத்தவில்லை. மிகவும் சோகமான சம்பவங்கள் இவை. ஆனால் இத்தனை காலத்திற்குப் பிறகும் ஏன் இவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் எனது கேள்வி.

அதிகாரத்தை எப்படிப் பறிக்க முடியும்
ஒரு மாநில அரசுக்கு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய உரிமை உள்ளது. அதிகாரம் உள்ளது. அதைத் தடுக்க முடியாது. ஒருவேளை அதை தடுக்க உச்சநீதிமன்றம் முயன்றால், மத்திய அரசு முயன்றால் அது மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் செயலாகவே அமையும். அதை உச்சநீதிமன்றம் செய்யக் கூடாது.

அரசியல் சாசனப்படி தவறாகும்
மாநில அரசு தனது சட்டப்பூர்வமான அதிகாரத்தை செயல்படுத்த விடாமல் உச்சநீதிமன்றம் தடுத்தால், அது அரசியல் சாசனச் சட்டத்தின் 21வது பிரிவின்படி உயிர் வாழும் உரிமையை மறுக்கும் செயலாக அமையும் என்றார் அவர்.
விசாரணை வருகிற செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடரும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications