உ.பி என்கவுண்டர் ராஜ்: பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் மேனேஜர்.. காரணத்தை பாருங்க!
காரை நிறுத்தாமல் சென்ற ஆப்பிள் நிறுவன ஊழியரை உத்தர பிரதேச போலீஸ் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
லக்னோ:காரை நிறுத்தாமல் சென்ற ஆப்பிள் நிறுவன ஊழியரை உத்தர பிரதேச போலீஸ் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் நாள் ஒன்றுக்கு மொத்தம் 4 என்கவுண்டர்கள் செய்யப்படுகிறது. சின்ன திருட்டு வழக்கில் உள்ளே செல்லும் நபர்கள் கூட பிணமாக வெளியே அனுப்பப்படுகிறார்கள்.
இப்படி எக்கவுண்டர் செய்யப்படுவதால் அதிகமாக கொலை செய்யப்படுவது இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் கோமதி நகரில் ஆப்பிள் மொபைல் நிறுவன மேனேஜர் விவேக் திவாரி, உத்தர பிரதேச போலீஸ் அதிகாரி பிரசாந்த் சவுத்திரி மூலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நிறுத்தாமல் சென்றுள்ளார்
ஆப்பிள் மொபைல் நிறுவன மேனேஜர் விவேக் திவாரி நேற்று அலுவலக வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் சிறிய விழா என்பதால் அவசர அவசரமாக சென்று இருக்கிறார். இடையில் போலீஸ் அவரை சோதனை செய்ய முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் அவசரத்தால் காரை நிறுத்தாமல் இவர் சென்றுள்ளார்.
[திருச்சியில் புதிதாக வாங்கிய வீட்டை பார்க்க சென்ற போது விபத்து.. 8 பேர் பலியான சோகம்! ]

துரத்தினார்
இந்த நிலையில் போலீஸ் அதிகாரி பிரசாந்த் சவுத்திரி, விவேக்கை வேகமாக துரத்தி சென்றுள்ளார். வேகமாக பைக்கில் சென்று கண்ணாடி வழியே விவேக்கை சரமாரியாக சுட்டுள்ளார் போலீஸ் பிரசாத். நான்கு முறைக்கும் மேல் விவேக்கை சுட்டுள்ளார்.

சுட்டுக் கொலை செய்தார்
இதனால் நிலைகுலைந்த விவேக் சாலை ஓர மரத்தில் மோதியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்தார். அவர் தலையிலும் முகத்திலும் மொத்தம் மூன்று குண்டுகள் பாய்ந்து அவர் இறந்திருக்கிறார்.

பிரச்சனை
இந்த சம்பவம் அங்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை நாட்கள் நுற்றுக்கணக்காக மக்கள் அங்கு என்கவுண்டர் செய்யப்பட்ட போது அம்மாநில முதல்வர் பெரிய அளவில் எதிர்ப்பை சந்திக்கவில்லை. ஆனால் தற்போது நடுசாலையில் ஒருவர் இப்படி கொலை செய்யப்பட்டு இருப்பது பெரிய பிரச்சனையாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications