சர்ஜிகல் ஸ்டிரைக்.. எதிரிகளை குறி வைத்து தாக்கிய மேஜருக்கு கீர்த்தி சக்ரா விருது
அண்மையில் நடைபெற்ற சர்ஜிகல் ஸ்டிரைக்கில் பாகிஸ்தான் எதிரிகளை குறி வைத்து தாக்கிய மேஜர் ரோஹித் சூரிக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி: குடியரசு தினத்தன்று சர்ஜிகல் ஸ்டிரைக்கில் பங்கு பெற்ற மேஜர் ரோஹித் சூரி உள்பட 5 பேருக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. மொகித் சூரிக்கு சவுர்ய சக்ரா விருதும், மற்ற துணை ராணுவ வீரர்களுக்கு யுத் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீர் எல்லை பகுதியில் இருந்த பாகிஸ்தான் ஆதரவு முகாம்களை தாக்கி அழிக்கும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லைக்கோட்டுப் பகுதியை தாண்டிச் சென்று இந்திய ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்தது. மேலும் 40க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, இந்தத் தாக்குதலை தலைமையேற்று, வெற்றிகரமாக செயல்படுத்திய ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை 4ஆம் பிரிவின் மேஜர் ரோஹித் சூரிக்கு, இந்திய ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான 'கீர்த்தி சக்ரா' விருது வழங்கப்பட்டது. ரோஹித் சூரி துல்லிய தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களுக்கு பயிற்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விருது பெற்ற வீரர்களின் விவரம்:
கீர்த்தி சக்ரா
1. மேஜர் ரோகித் சூரி - 4ஆம் பிரிவு (சிறப்பு அதிரடிப்படை)
2. ஹவில்தார் பிரேம் பகதூர் - கூர்க்கா பிரிவு (இறப்புக்கு பிறகு)
உத்தம் யுத் சேவா விருது
1. லெப்டினன்ட் ஜெனரல் ஷ்ரவண் குமார்
2. லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர ராம்ராவ் நிம்போர்கர்.
3. லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா
4. லெப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அன்பு
5. லெப்டினன்ட் ஜெனரல் அபய் கிருஷ்ணா
சவுரிய சக்ரா விருது
1. லெப்டினன்ட் கர்னல் அதுல் குப்தா, மகார்
2. மேஜர் டி.வினய் ரெட்டி, சென்னை.
3. மேஜர் ரஜத் சந்திரா (4-வது பிரிவு - சிறப்பு அதிரடிப்படை)
4. மேஜர் தீபக் குமார் உபாத்யாயா (9-வது பிரிவு - சிறப்பு அதிரடிப்படை)
5. கேப்டன் அசுடோஷ் குமார் (4-வது பிரிவு - சிறப்பு அதிரடிப்படை )
6. கேப்டன் ஆசிக் - கூர்க்கா பிரிவு.
7. சுபேதார் விஜய்குமார் - (4-வது பிரிவு சிறப்பு அதிரடிப்படை)
8. ஹவில்தார் ஹனுமன் ராம் சரண்.
9. நாயக் கவாடே பாண்டுரங் மகாதேவ் (இறப்புக்கு பின்பு)
10. அப்துல் கயூம் (9-வது பிரிவு சிறப்பு அதிரடிப்படை)
யுத் சேவா விருது 14 பேருக்கும், தீரச் செயல் விருது 3 பேருக்கும், சேனா விருது 91 பேருக்கும் வழங்கப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications