ஆந்திராவில் 'கட்டிப்பிடி முத்த' சாமியார் கைது! மனநல மையத்தில் சேர்க்க கோர்ட் உத்தரவு!
கடப்பா: ஆந்திராவில் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அருள்வாக்கு கூறிவந்த டுபாக்கூர் சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவரை மனநிலை மையத்தில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். தங்கள் குடும்ப பிரச்சனை, மனக்குறைகள் போன்றவற்றை சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்ட பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து "அருள்வாக்கு" கூறி வந்திருக்கிறார்.

இந்த போலி சாமியார் பற்றி போலீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. சாமியார் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மோசடி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சாமியாரின் அறைக்குள் புகுந்து சோதனை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை ஜனவரி 7-ந்தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மேலும் அவரது நடவடிக்கைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் சாமியாரை மனநல மையத்தில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அவர் மனநல மையத்தில் சேர்க்கப்பட்டார். போலி சாமியாரின் உதவியாளர் சுப்பா ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications