தம்பதிபோல.. முத்தம் தர சொல்லி ராகிங்.. பைப்பால் விரட்டி மாணவியை அடித்த சீனியர்.. பதறவைக்கும் வீடியோ
காலேஜில் மாணவிக்கு ராகிங் செய்து முத்தம் தந்த மாணவன் கைதாகி உள்ளான்
புவனேஸ்வர்: கல்லூரி மாணவர்களின் ரேகிங் வீடியோ வெளியாகி கடுமையான அதிர்ச்சியை பெற்றவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது?
ராகிங் சமாச்சாரங்கள் சமீபகாலமாகவே தலைதூக்கி வருகிறது.. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே ஏன் கல்வி நிறுவனங்களால் தடுக்க முடியவில்லை? ராகிங் தடுப்பு குழுக்கள் என பல இருந்தும், சட்டம் நீதிமன்ற உத்தரவுகள் பல இருந்தும் ராகிங்கை வளர விடுவது யார் பொறுப்பு என்ற கேள்விகளை நீதிமன்றங்கள் எழுப்பி வருகின்றன.
4 நாட்களுக்கு முன்புகூட வேலூர் சிஎம்சி கல்லூரியில் ராகிங் நடந்து கோர்ட் வரை விவகாரம் சென்றது.. ஜூனியர் மாணவர்களை அரைநிர்வாணப்படுத்தி சீனியர் மாணவர்கள் ராகிங் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியது.கல்லூரியில் ராகிங் தடுப்பு குழுக்கள் பெயரளவில் இருக்கிறதா? என்று நீதிபதிகள் அதிருப்தியும் தெரிவித்தனர்..

CMC மேட்டர்
வேலூர் சிஎம்சி கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்ட புகாரில், சீனியர் மாணவர்கள் மீதான குற்றச்சாடு முழுமையாக நிரூபிக்கப்பட்டால் நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சென்னை ஹைகோர்ட்டுக்கு, சிஎம்சி நிர்வாகம் உறுதி தந்துள்ளதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது... அதேசமயம், ராகிங் என்றபெயரில் சீனியர்கள் உடல் மற்றும் பாலியல் மிரட்டல்களை தொடருவது, ஜூனியர்களை வாழ்நாள் முழுவதும் காயப்படுத்தலாம் என்று மனநல மருத்துவர்களும் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. இதோ இன்னொரு சம்பவம் ஒடிசா பெர்காம்பூர் பகுதியில் நடந்துள்ளது.

சிஎம்சி ஐ லவ்யூ
பினாயக் ஆச்சார்யா என்ற கல்லூரி இங்கு செயல்பட்டு வருகிறது... அங்கு படிக்கும் மாணவி ஒருவரை ராகிங் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி, காண்போரை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. அந்த மாணவியும் அதே கல்லூரியில்தான் படிக்கிறார். அந்த மாணவியிடம் "ஐ லவ் யூ" என்று சொல்லிக் கொண்டே வலுக்கட்டாயமாக முத்தமிடுகிறார் அதே கல்லூரியில் படிக்கும் அந்த மாணவர்.. இதில் பயந்து போன அந்த மாணவி, அந்த இடத்தை விட்டு வெளியேற முயலுகிறார்.. ஆனால், அந்த மாணவர் பின்னாடியே சென்று மாணவிக்கு முத்தம் தருகிறார்..

பிளாஸ்டிக் பைப்
மறுபடியும் அங்கிருந்து நழுவி ஓடுகிறார். அப்போது அவரை பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பதாக மிரட்டுகிறார்கள் சீனியர் மாணவர். இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராகிங் செய்த மாணவரை கைது செய்தனர். அவன் பெயர் அபிஷேக் நஹக்... ஹர்தக்ந்தியில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்தவர்.. ஆனால் இவர் ஒரு ரவுடியாம்.. இவர் மீது ஏற்கனவே நிறைய வழக்குகள் இருப்பதாக போலீசார் சொல்கிறார்கள்.. ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே நிறைய அத்துமீறல்களை செய்து வந்துள்ளதாக தெரிகிறது..

முத்தம்
இவருடன் மேலும் சில மாணவர்களும், மாணவிக்கு முத்தம் தர டாச்சர் செய்துள்ளனர்.. எனவே, அனைத்து மாணவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளிப்புகள் எழுந்து வருகின்றன... இதையடுத்து, அனைத்து மாணவர்களையும் தற்போது அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக பெர்காம்பூர் போலீஸ் அதிகாரி தெரிவித்து உள்ளார். அதாவது, ஒரு ஜூனியர் மாணவனை அழைத்து, அந்த மாணவியையும் அழைத்து, இருவரும் தம்பதியை போல் நடந்து கொள்ள வேண்டும் என்று சீனியர்கள் சொல்லி உள்ளார்கள்..

முத்த டார்ச்சர்
அதற்கு அந்த பெண் மறுக்கவும்தான், சீனியர்கள் எல்லாம் சேர்ந்து, பிளாஸ்டிக் பைப்பால் அடித்துள்ளனர்.. ஓட ஓட பைப்பால் அடித்து துன்புறுத்தி ராகிங் செய்து, அந்த பெண்ணுக்கு முத்த டார்ச்சர் தர செய்திருக்கிறார்கள்.. மற்ற மாணவர்கள் முன்னிலையில், ஜூனியர் மாணவர்களை அடித்தும் துன்புறுத்தியுள்ளனர் இந்த சீனியர்கள்.. இந்த சம்பவமும், இந்த வீடியோவும் வெளியாகி, பெற்றோர்களின் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டி வருகிறது.

முத்தம் கண்டிஷன்
கல்லூரி வளாகத்திலேயே இந்த கொடுமை நடந்துள்ளது.. ஒரு மாணவியைச் சுற்றி பல மாணவர்கள் ராகிங் செய்கிறார்கள்.. மாணவி தப்பிக்க முயற்சிக்கும்போது, சேரில் உட்கார்ந்திருக்கும் ஒரு மாணவர், அந்த பெண்ணை மிரட்டி கீழே தள்ளி விடுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.. ஒரு மாணவன் முத்தம் தந்து முடித்ததுமே, இன்னொரு மாணவன் மாணவிக்கு முத்தம் தர வேண்டும் என்று கண்டிஷனும் ராகிங்கில் போட்டுள்ளார்கள். மேலும், மாணவியை ராகிங் செய்யும்போது, சுற்றி நின்று மற்ற மாணவ, மாணவிகள் கைதட்டி சிரிப்பதையும் அதில் காண முடிகிறது.. இந்த சம்பவத்திற்கு மாணவர் அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்த ராகிங் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மாணவர்கள் மீது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications