அத்தனை கண்களும் இவரை நோக்கியே.. யார் இந்த வஜுபாய் வாலா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா

    பெங்களூரு: கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலா மீது அத்தனை பேரின் பார்வையும் திரும்பியுள்ளது.

    இனிமேல் வஜுபாய் வாலா எடுத்து வைக்கப் போகும் ஒவ்வொரு அடியும் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும், கவனிக்கப்படும் என்பதால் அவர் மீது அத்தனை பேரின் பார்வையும் திரும்பியுள்ளது.

    வஜுபாய் வாலாதான் அடுத்து கர்நாடகத்தில் அமையப் போகும் ஆட்சியை முடிவு செய்யப் போகிறார். இதற்கு முன்பு கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடந்த கலாட்டாக்கள் உலகம் அறிந்தது. எனவே கர்நாடக ஆளுநர் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

    சரி வஜுபாய் வாலா குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.

    குஜராத் தலைவர்

    குஜராத் தலைவர்

    வஜுபாய் வாலா குஜராத்தைச் சேர்ந்தவர். இவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். பாஜக சார்பில் எம்.எல்.ஏவாக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் ஆவார்.

    முன்னாள் குஜராத் சபாநாயகர்

    முன்னாள் குஜராத் சபாநாயகர்

    குஜராத் சட்டசபை சபாநாயகராக 2012 முதல் 2014 வரை பதவி வகித்தவர் வஜுபாய் வாலா. அதாவது மிக மிக லேட்டஸ்டாகத்தான் இவர் ஆளுநர் பதவிக்கு வந்தவர். அதற்கு முன்பு வரை தீவிர அரசியல்வாதியாக திகழ்ந்தவர் (தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மாதிரி- முதல்வர் பதவியிலிருந்து வெளியேறிய கையோடு ஆளுநரானவர் ரோசய்யா)

    மாஜி மத்திய அமைச்சர்

    மாஜி மத்திய அமைச்சர்

    மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார் வஜுபாய் வாலா. குஜராத் அமைச்சராக 1997 முதல் 2012 வரை பல்வேறு துறைகளை வகித்துள்ளார். அம்மாநில நிதியமைச்சராக 18 முறை இருந்தவர். 18 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்தவரும் கூட. ராஜ்கோட் தொகுதியிலிருந்து குஜராத் சட்டசபைக்கு பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் வஜுபாய் வாலா.

    தீவிர ஆர்.எஸ்.எஸ்

    தீவிர ஆர்.எஸ்.எஸ்

    ஜனசங்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தீவிர ஆர்எஸ்எஸ் காரர். அவசர நிலை காலத்தில் 11 மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். 2014ம் ஆண்டு முதல் கர்நாடக ஆளுநராக இருந்து வருகிறார் வஜுபாய் வாலா.

    தற்போது கர்நாடகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்ற பெரும் சிக்கலில் வஜுபாய் வாலா உள்ளார். அவரது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+