மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு... இது கொச்சியில்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அந்நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கொச்சியில் அடுத்த ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது. இதையடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வழங்க வாய்ப்பு கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் நிலையங்களில், பராமரிப்புப் பணி, வாடிக்கையாளர்கள் தொடர்பு பணி உள்ளிட்ட பல துறைகளில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் எலிஸ் ஜார்ஜ் கூறியதாவது: சமூகத்தில் திருநங்கைகள் தாங்கள் ஒடுக்கப்படுவது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கு கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் லைவாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் திருநங்கைள் தாங்கள் நினைப்பது போல, சமூதாயத்தில் ஓர் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கூறினார்.
கொச்சி காவல்துறையின் பரிந்துறையை ஏற்று, கொச்சி மெட்ரோ நிர்வாகம் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது என முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் அதிக அளவில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications