கோலி: டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - 6 சுவாரசிய தகவல்கள்

Subscribe to Oneindia Tamil
Kohli crosses 10 thousand runs in T20 cricket
Bci / ipl
Kohli crosses 10 thousand runs in T20 cricket

டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகியுள்ளார் விராட் கோலி.

அவர் இந்த சாதனையை நிகழ்த்திய நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

விராட் கோலியின் முக்கிய மைல் கல் குறித்த ஆறு முக்கியத் தகவல்கள் இதோ.

https://twitter.com/RCBTweets/status/1442131617154170882

  1. சர்வதேச டி20 போட்டிகள், உள்நாட்டு டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் என அனைத்து வகையான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து விராட் கோலி 10,000 ரன்களைக் கடந்துள்ளார்.
  2. சென்ற வாரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய போட்டியில் பங்கேற்றதன் மூலம் 200வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றிருந்தார் விராட் கோலி. ஆனால், அந்தப் போட்டியில் ஆர்.சி.பி மோசமாகத் தோற்றது.
  3. ஐபிஎல் 2021 போட்டித் தொடரின் இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விராட்கோலி ஞாயிறன்று நடந்த போட்டியில் களம் இறங்கிய பொழுது 10,000 ரன்களை எட்ட அவருக்கு 13 ரன்களே தேவைப்பட்டிருந்தது.
  4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நேற்று தேவ்தத் படிக்கல் உடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி 16வது ரன்னை எட்டிய பொழுது 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். நேற்று 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் கோலி.
  5. சர்வதேச அளவில் இதுவரை நான்கு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தனர். தற்பொழுது ஐந்தாவது வீரர் ஆக்கியுள்ளார் விராட் கோலி.
  6. கிறிஸ் கெய்ல் (14,275), பொல்லார்டு (11,195), ஷோயப் மாலிக் (10,808), டேவிட் வார்னர் (10,019) ஆகிய நால்வரும் முன்னதாக அனைத்து வகையான டி20 போட்டிகளிலும் 10,000 ரன்களைக் கடந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+