அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு காதலர் கோஹ்லி என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு பிறந்தநாள் பரிசு ஒன்று அளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

அனுஷ்காவை பிரிந்த கையோடு ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் அவரை ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார் கோஹ்லி. அனுஷ்காவை பிரிந்தாலும் அவருடன் மீண்டும் ஒன்று சேர முயற்சி எடுத்து வந்தார் கோஹ்லி.
இந்நிலையில் அண்மையில் அனுஷ்காவும், கோஹ்லியும் ஹோட்டல் ஒன்றுக்கு ஜோடியாக சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டதாக கூறப்பட்டது.
கடந்த 1ம் தேதி அனுஷ்காவுக்கு பிறந்தநாள். அவருக்கு பிறந்தநாள் பரிசு அளிக்கும் வகையில் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் அவரை மீண்டும் ஃபாலோ செய்யத் துவங்கியுள்ளார் கோஹ்லி. இதன் மூலம் அவர்கள் காதலை புதுப்பித்துவிட்டதாக பலர் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.












Click it and Unblock the Notifications