எங்களுக்கு நீதி முக்கியம்.. கொல்கத்தா மருத்துவர் கொலை! பதவியை தூக்கி எரிந்த 50 சீனியர் டாக்டர்கள்.!
கொல்கத்தா: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஜூனியர் மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 மூத்த மருத்துவர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த மாதம் முன்னர் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் கடந்த சில நாட்களாக சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும், தீவிரம் சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான பயிற்சி மருத்துவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கைகளைக் கொண்டு கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
மேலும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அந்த மாணவியின் பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கிறது. மூக்கு, கழுத்து, கை, கண்ணம், உதடு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் 16 இடங்களிலும், கழுத்து, உள்தசை, உச்சந்தலை என உள்பகுதிகளில் ஒன்பது இடங்களில் மிக கொடூரமான காயங்கள் இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது.
இந்த நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தொடர்ந்து போராடினர். மூன்று வாரங்களை கடந்து போராட்டம் தொடர்ந்த, நிலையில் அரசு மருத்துவமனைகளை மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொல்கத்தா மற்றும் மேற்குவங்கத்தில் பல்வேறு பகுதிகளில் மருத்துவ சேவைகள் பாதிப்படைந்ததால் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது.
மேலும் மருத்துவர்கள் பாதுகாப்பு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும் படி தேசிய பணிக்குழுவை உச்ச நீதிமன்றம் கேட்டதை அடுத்து மருத்துவ பயிற்சி மாணவர்கள் பணிக்கு திரும்பினார். அதே நேரத்தில் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கல்லூரி வளாகத்தில் ஜூனியர் பயிற்சி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று போராட்டம் இரண்டாவது நாளை எட்டி உள்ளது. மேலும், பயிற்சி மருத்துவ மாணவர்களின் போராட்டத்திற்கு பொதுமக்களும், பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து மாணவ மாணவியருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
திடீர் திருப்பமாக ஆர்ஜி கர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 50 சீனியர் மருத்துவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications