தலைவலி மம்தாவுக்கு.. நடுங்க வைத்த கொல்கத்தா டாக்டர் கொலை - நாடெங்கும் இன்று டாக்டர்கள் ஸ்டிரைக்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும் இன்று போராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள் மருத்துவர்கள் சங்கம்.

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார் அந்த பயிற்சி பெண் டாக்டர்.. இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த நிலையில், நேற்றுமுன்தினம் காலை மருத்துவமனையின் 3வது மாடியிலுள்ள கருத்தரங்கு அரங்கில் பிணமாக மீட்கப்பட்டார்...

West Bengal Protest

அன்றைய தினம் நைட் டியூட்டியில் இருந்தபோது, இவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள்..
அத்துடன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியாகி, ஒட்டுமொத்த பேருக்கும் கடுமையான அதிர்ச்சியை தந்தது...

அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், பெண் டாக்டரின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டுள்ளது... பிறகு அவரது மூச்சை நிறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்... உடல் முழுக்க காயங்கள் இருந்துள்ளன.. அவரின் அந்தரங்க பாகங்களில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது.

போஸ்ட் மார்ட்டம்: அவரது கண்கள் மற்றும் வாய் இரண்டிலிருந்தும் ரத்தம் கசிந்திருந்தது.. முகத்தில் காயங்கள் மற்றும் ஒரு நகத்தில் காயம் இருந்தது. உதடு, வயிறு, இடது கால், கழுத்து, வலது கை, மோதிர விரல் ஆகியவற்றிலும் காயங்கள் உள்ளன" என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த கொடூர சம்பவம் அதிகாலை 3 முதல் 6 மணிக்குள் நடந்துள்ளதாக சொல்கிறார்கள் கொல்கத்தா போலீசார்..

பெண் டாக்டரின் கழுத்து எலும்பும் உடைந்த நிலையில் காணப்பட்டதால், கழுத்தை நெரித்தே கொன்றிருப்பதாகவும் போலீஸார் கூறுகிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில், உண்மையை மறைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் உயிரிழந்த பெண் டாக்டரின் அப்பா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்துள்ளார்..

பெண் டாக்டர்: ஆனால் "பெண் டாக்டர் கொலை வழக்கில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க கோர்ட்டில் முறையிடுவோம். சிபிஐ விசாரணை நடத்தினாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

மருத்துவமனை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும்கூட, இப்படியொரு சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்றும் மம்தா கூறியிருந்த நிலையில், விசாரணை தீவிரமாகி வருகிறது.

குற்றவாளிகள்: இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பிற டாக்டர்களும் அந்த குற்றவாளியை அடையாளம் காட்டினார்கள்.. கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய், 4 முறை திருமணம் ஆனவர் என்பதும் அவர்களில் 3 பேர், அவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் விட்டு சென்றதும் தெரிய வந்த நிலையில், வரும் 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் ராய் வைக்கப்பட்டு உள்ளார்.

எனினும் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.. இதனால் மருத்துவ சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது... இடதுசாரி மாணவர் அமைப்பினரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. டாக்டர்களையும், மாணவர் அமைப்புகளையும் அதிகாரிகளால் சமாளிக்க முடியவில்லை..

மருத்துவர்கள்: மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று சொல்லி, முதுநிலை மருத்துவம் பயின்று வரும் மற்ற டாக்டர்கள், இனிமேல் நைட் டியூட்டிக்கு வரமாட்டோம் என்று முழக்கமிட்டுக் கொண்டே கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, மருத்துவமனைக்கு ஊர்வலமாக வந்தனர்.. நர்ஸ்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் இன்று இந்தியா முழுவதும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். மருத்துவமனையில் ஐசியூ பிரிவை தவிர, மற்ற டாக்டர்கள் எல்லாருமே போராட்டத்தில் ஈடுபட போவதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.

தலைவலி: இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளதால், அவசர சிகிச்சை பிரிவை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளையும் மருத்துவர் சங்கம் புறக்கணிக்க போகிறது. ஒட்டுமொத்த மருத்துவர்களின் ஆவேசமும் கொந்தளிப்பும் அடங்காத நிலையில், கொல்கத்தாவில் போராட்டம் வெடித்துள்ளது, மம்தா அரசுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+