கொல்கத்தா பெண் டாக்டர்.. தொங்கிய சதைகள்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை கண்டு அதிர்ந்த மருத்துவமனை
கொல்கத்தா: பெண் டாக்டர் பலாத்கார சம்பவம்தான், மேற்கு வங்க மாநிலத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் போராட்டம், மறுபக்கம் உறவினர்களின் கொந்தளிப்புக்கு நடுவே, மாநில அரசு திணறி கொண்டிருக்கிறது.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார் அந்த பயிற்சி பெண் டாக்டர்.. இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தவர்.. இவர் நேற்று காலை மருத்துவமனையின் 3வது மாடியிலுள்ள கருத்தரங்கு அரங்கில் பிணமாக மீட்கப்பட்டார்...

அன்றைய தினம் நைட் டியூட்டியில் இருந்துள்ளார் இந்த டாக்டர்.. ஆனால், மறுநாள் சடலமாக கிடந்தார்.. அரை நிர்வாணமாக கிடந்துள்ளார்.. உடலில் பலாத்கார காயங்கள் தென்பட்டது.. இதையடுத்து, போலீசார் உடனடியாக விரைந்து வந்து, சடலத்தை மீடுடு போஸ் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து, விசாரணையையும் துவங்கினர்.
பலாத்காரம்: இந்த கொலை தொடர்பாக, சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. எனினும் மொத்த குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி, டாக்டரை பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.. இதனால் மருத்துவ சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது...
இந்த கொடுமையை கேள்விப்பட்டதுமே, இடதுசாரி மாணவர் அமைப்பினரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்... இதனால் அதிகாரிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர்.. டாக்டர்களையும், மாணவர் அமைப்புகளையும் சமாளிக்க முடியவில்லை..
மம்தா பானர்ஜி: போதாக்குறைக்கு, இச்சம்பவத்தில் உண்மையை மறைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் உயிரிழந்த பெண் டாக்டரின் அப்பா குற்றஞ்சாட்டியிருப்பதுடன், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்துள்ளார். மருத்துவ சேவையும் தடைபட்டுவிட்டதால் விஷயம், முதல்வர் மம்தா பானர்ஜி வரை சென்றுவிட்டது.
"பெண் டாக்டர் கொலை வழக்கில் மறைப்பதற்கு எதுவும் இல்லை, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க கோர்ட்டில் முறையிடுவோம். சிபிஐ விசாரணை நடத்தினாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் நிர்வாகத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்... மருத்துவமனை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும்கூட, இப்படியொரு சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்று மம்தா செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
கடும் போராட்டம்: எனினும் கொல்கத்தாவில் பதற்றம் தீரவில்லை, கொந்தளிப்பும் அடங்கவில்லை.. மருத்துவமனையில் ஐசியூ பிரிவை தவிர, மற்ற டாக்டர்கள் எல்லாருமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று சொல்லி, முதுநிலை மருத்துவம் பயின்று வரும் மற்ற டாக்டர்கள், இனிமேல் நைட் டியூட்டிக்கு வரமாட்டோம் என்று முழக்கமிட்டுக் கொண்டே கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, மருத்துவமனைக்கு ஊர்வலமாக வந்தனர்.. நர்ஸ்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இப்படிப்பட்ட சூழலில், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியாகி, ஒட்டுமொத்த பேருக்கும் கடுமையான அதிர்ச்சியை தந்திருக்கிறது.. பாலியல் வன்கொடுமை செய்தே அந்த பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணின் அம்மா, உட்பட 2 பெண்கள் முன்னிலையில், இந்த போஸ்ட் மார்ட்டம் நடந்துள்ளது.. இவை அனைத்துமே கேமராவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸார் திட்டவட்டம்: முதலில் தற்கொலையா? என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதற்கு பிறகே கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
"பெண் டாக்டரின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டுள்ளது... பிறகு அவரது மூச்சை நிறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்... உடல் முழுக்க காயங்கள் இருந்துள்ளன.. அவரின் அந்தரங்க பாகங்களில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது.. அவரது கண்கள் மற்றும் வாய் இரண்டிலிருந்தும் ரத்தம் கசிந்திருந்தது.. முகத்தில் காயங்கள் மற்றும் ஒரு நகத்தில் காயம் இருந்தது. உதடு, வயிறு, இடது கால், கழுத்து, வலது கை, மோதிர விரல் ஆகியவற்றிலும் காயங்கள் உள்ளன" என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழுத்து எலும்பு: இந்த கொடூர சம்பவம் அதிகாலை 3 முதல் 6 மணிக்குள் நடந்துள்ளதாக சொல்கிறார்கள் கொல்கத்தா போலீசார்.. பெண் டாக்டர்ன் கழுத்து எலும்பும் உடைந்த நிலையில் காணப்பட்டதால், கழுத்தை நெரித்தே கொன்றிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் இருந்த ஒருவர் சொல்லும்போது, கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர், நள்ளிரவு 2 மணியளவில், ஜூனியர் மருத்துவ மாணவிகளுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார்... டாக்டர்கள் ஓய்வெடுக்க தனி அறை இல்லாததால்தான், 4வது மாடியிலுள்ள கருத்தரங்கு ஹாலுக்கு சென்று ஓய்வெடுத்தார்... அதற்குள் இப்படியாகிவிட்டது" என்கிறார்.
தீவிர போராட்டம்: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையே தருவோம் என்று அதிகாரிகள் கூறிவருகிறார்கள் என்றாலும், மருத்துவர்களின் ஆவேசமும் கொந்தளிப்பும் அடங்கவில்லை. இதனால், கொல்கத்தாவில் போராட்டம் தீவிரமாகி கொண்டிருக்கிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications