For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாம்பை விட்டு கடிக்க வைத்து.. மனைவி கொடூர கொலை.. கணவர் குற்றவாளி.. நீதிமன்றம் தீர்ப்பு!

Google Oneindia Tamil News

கொல்லம்: கேரளாவில் பாம்பை ஏவிவிட்டு கடிக்க வைத்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவரை குற்றவாளி என்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரம் 13-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

நாளை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- திமுகவின் வெற்றி தொடருமா? பாமக சாதிக்குமா? நாளை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- திமுகவின் வெற்றி தொடருமா? பாமக சாதிக்குமா?

கேரள மாநிலத்தில் விஷப்பாம்புகளை கடிக்க விட்டு கொலை செய்யும் கொடிய செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இப்படி நடந்த ஒரு கொலை சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதையும் உலுக்கியது.

விஷப்பாம்பு கடித்தது

விஷப்பாம்பு கடித்தது

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த உத்ரா. இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் அரூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு தொடக்கத்தில்
உத்ராவை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.

பரிதாபமாக உயிரிழந்தார்

பரிதாபமாக உயிரிழந்தார்

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் வீட்டில் இருந்த உத்ராவை மீண்டும் விஷப் பாம்பு கடித்துள்ளது. ஆனால் இந்த முறை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உத்ராவை இரண்டு முறை பாம்பு கடித்ததால் அனைவருக்கும் சந்தேகம் எழுந்தது. ஏனெனில் உத்ரா 2-வது மாடியில் உள்ள
ஏ.சி. அறையில் படுத்திருக்கும்போது அவரை பாம்பு கடித்துள்ளது. அந்த அறையின் ஜன்னலை கூட திறக்க வாய்ப்பில்லை என்பதால் விஷப்பாம்பு எப்படி வந்தது? என்ற கேள்வி எழுந்தது.

இது கொடூரமான கொலை

இது கொடூரமான கொலை

புகாரின்பேரில் இதனை விசாரித்த போலீசாருக்கு மேற்கண்ட சந்தேகம் துளைத்தெடுத்தது. இந்த நேரத்தில் போலீசாருக்கு ஒரு க்ளூ கிடைத்தது. அதாவது எப்போதுமே தாமதமாக எழுந்திரிக்கும் சூரஜ், மனைவியை பாம்பு கடித்த அந்த நாளில் மட்டும் அறையில் இருந்து சீக்கிரமே எழுந்து சென்றுள்ளார். இதனால் போலீசாரின் பார்வை கணவர் சூரஜ் பக்கம் திரும்பவே தங்கள் பாணியில் அவரை விசாரித்தனர். அப்போது வரதட்சணைக்காகதான் உத்ராவை கொன்றுவிட்டதாக அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

வரதட்சணைதான் காரணம்

வரதட்சணைதான் காரணம்

ஏற்கனவே ஒருமுறை பாம்பை கடிக்க வைத்து கொல்ல நடந்த முயற்சியில் உத்ரா தப்பி விட்டார். இதனால் அவர் இரண்டாவது முறை உத்தராவுக்கு தூக்க மாத்திரை கொடுத்து படுக்க வைத்து பாம்பை கடிக்க வைத்து கொன்றுள்ளார். பாம்பாட்டியிடம் பணம் கொடுத்து விஷப்பாம்பை வாங்கி அவர் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். ஏற்கனவே உத்ரா 100 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் ரொக்கம், சொத்து, கார் பல கோடிக்கணக்கில் வரதட்சணையை கொட்டி கொடுத்துள்ளார்.

போலீசாரின் சோதனை

போலீசாரின் சோதனை

ஆனாலும் சூரஜ் கூடுதல் வரதட்சணை கேட்ட நிலையில், உத்ரா அதற்கு மறுத்ததால் கொடூரமாக கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த கொலையில் நேரடி சாட்சியம் ஏதும் இல்லாததால், பாம்பை வைத்தே குற்றத்தை நிரூபித்தனர் போலீசார். அதாவது பாம்பு எப்படி கடித்திருக்கும் என்பதை அறிய, உத்ரா போன்ற உருவபொம்மையை அறையில் படுக்கை வைத்து. பாம்பை விட்டு பரிசோதனை செய்தனர்.

குற்றவாளி

குற்றவாளி

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சமீபத்தில் இது தொடர்பாக 100 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சூரஜ் குற்றவாளி என்று கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரங்கள் வருகிற 13-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

English summary
A Kollam court has convicted a man of brutally killing his wife by biting a snake in Kerala. The sentence details are announced on the 13th october
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X