சீமானை சுட்டு கொன்று இருப்பேன்.. இந்தியாவில் இருப்பதால் தப்பித்துவிட்டார்.. இலங்கை தமிழ் எம்பி மிரட்டல்
கொழும்பு: ''நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள். அங்கு நான் ஆயுதம் கொண்டு வர முடியாது. ஆயுதம் கொண்டு வர முடிந்திருந்தால் சுட்டு இருப்பேன்டா. நல்ல காலம் நீ இந்தியாவில் இருக்கிறாய். யாழ்ப்பாணம் வந்திருந்தால் வெடிவைத்து இருப்பேன். இந்தியாவில் நீ பாதுகாப்பாய் இருந்து கொள்'' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, இலங்கையின் தமிழ் எம்பி அர்ச்சுனா ராமநாதன் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுததுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் சுயேச்சை தமிழ் எம்பியாக இருப்பவர் அர்ச்சுனா ராமநாதன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். சமீபத்தில் தமிழகம் வந்திருந்தார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோரை சந்தித்து பேசினார். பிறகு விசிக தலைவர் திருமாவளவன் உடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தர் நிகழ்ச்சியில் பங்கற்றார்.

அதேவேளையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இலங்கை தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்வதாக தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் தான் மே 18 இலங்கை தமிழர் படுகொலை நாளில் அர்ச்சுனா ராமநாதன் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போத அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
''எங்களுடைய அண்ணன் சீமான் அன்றைய தினம் அவன் என்னடா என்று கேவலமான வார்த்தைகளில் பேசியிருந்தார். அண்ணன் நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள். அங்கு நான் ஆயுதம் கொண்டு வர முடியாது. ஆயுதம் கொண்டு வர முடிந்திருந்தால் சுட்டு இருப்பேன்டா. நல்ல காலம் நீ இந்தியாவில் இருக்கிறாய்.
யாழ்ப்பாணம் வந்திருந்தால் வெடிவைத்து இருப்பேன். இந்தியாவில் நீ பாதுகாப்பாய் இருந்து கொள். திரள்நிதி வரும். சாப்பிடு அப்படியே இரு. எங்களின் இனத்தை விற்காதே. எனக்கு வலிக்கிறது. என்னுடைய தந்தை இறந்திருக்கிறார். தாய் இறந்திருக்கிறார். பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். எங்களின் வலியை விற்காதே. அவ்வளவு தான் கேட்டு கொள்கிறேன். தாராளமாக திரள்நிதி வாங்கி வயிற்றை நிரபம்பி கொள். அதுபற்றி நான் ஒன்றும் கேட்க மாட்டேன்'' என்று ஆக்ரோஷமாக சீண்டி உள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications