ரொம்ப கொடுமை.. உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தபோதே பலியான பிரபல பாடகர்.. திக், திக் காட்சி
Recommended Video
மங்களூர்: மனிதனுக்கு மரணம் என்பது எந்த நேரத்தில் நிகழும் என்பது தெரியாது. இது பிரபஞ்சத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸ். ஆனால், கர்நாடகாவில் மேடை பாடகர் ஒருவருக்கு நேர்ந்த மரணம், நினைத்தாலே நெஞ்சத்தை பதற வைப்பதாக உள்ளது.
கர்நாடகாவில் புழக்கத்தில் உள்ள மொழிகளில் ஒன்று கொங்கணி. இந்த மொழியில் அருமையான பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம்பிடித்தவர், ஜெர்ரி போஜ்ஜோடி. 51 வயதுதான் ஆகிறது.
கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆங்காங்கு இந்த பண்டிகையையொட்டி இசைக் கச்சேரிகள் நடைபெறும். எனவே, ஜெர்ரியும் ரொம்பவே பிசியாக இருந்தார்.

சரிந்து விழுந்தார்
இப்படித்தான் மங்களூர் அருகே, பெஜாய் பகுதியில், செவ்வாய்க்கிழமை இரவு, நடைபெற்ற இசைக் கச்சேரியில், ஜெர்ரி போஜ்ஜோடி பங்கேற்று பாடிக் கொண்டிருந்தார். இசை ஒரு பக்கம், இசைக்க, மைக்கை பிடித்து, ரொம்பவே ஆர்வமாக பாடிக் கொண்டிருந்தார் ஜெர்ரி. எந்த ஒரு சலனமும் இன்றி, உற்சாகமாகத்தான் பாடிக்கொண்டிருந்தார், ஜெர்ரி. ஆனால், ஒரு கட்டத்தில், சில விநாடிகள் மட்டும் அவரது கண்கள் சொக்கிப்போயின. திடீரென, அப்படியே முன்நோக்கி சரிந்தார். மேடையில் பாதி உடலும், கீழே பாதி உடலுமாக அப்படியே விழுந்து கிடந்தார், ஜெர்ரி.

இறுதி காட்சி
கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்த, ரசிகர்கள் அப்படியே அதிர்ச்சியாகிவிட்டனர். அலறியடித்தபடி, ஜெர்ரியை நோக்கி ஓடிச் சென்று அவரை தூக்கி வைத்து, தட்டி எழுப்பி பார்த்தனர். ஆனால் ஜெர்ரியிடம் இருந்து எந்த ஒரு அசைவுமே வரவில்லை. அப்போதுதான், ஜெர்ரி இறந்து போனது தெரியவந்தது. இந்த இசைக் கச்சேரியை வீடியோவாக பதிவு செய்துகொண்டு இருந்தனர் ரசிகர்கள். அந்த வீடியோவில், இந்த இறுதிக் காட்சி பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரல்
சோஷியல் மீடியாவில், ஜெர்ரியின் இறுதி நிமிட காட்சிகள், வைரலாக பரவி வருகின்றன. மனிதனின் வாழ்க்கைதான் எத்தனை விந்தனையானது, நிரந்தரமற்றது என்பதற்கு இதைவிட வேறு ஒரு வீடியோ சாட்சியாக இருக்க முடியாது. ஆனால், எத்தனையோ கனவுகளுடன் வாழ்ந்த, உற்சாகமாக பாடிக்கொண்டிருந்த ஜெர்ரிக்கு இப்படி ஒரு மரணம் ஏற்பட்டிருக்க கூடாது என்று ரசிகர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்.

பிரபல கவிஞர், பாடகர்
ஜெரால்ட் ஓஸ்வால்ட் டிசவுசா, என்ற இயற்பெயர் இருந்தாலும், ஜெர்ரி போஜ்ஜோடி என்ற பெயரால்தான் இவர் பிரபலமானார். இவருக்கு லவினா என்ற மனைவியும், ஜெஸ்லிதா, ஜாய்ஸ்டன் மற்றும் லோகிதா என்ற குழந்தைகளும் உள்ளனர். இவர் இதுவரை 60க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications