மெர்சல் பற்றி ஆர்வ கோளாறில் பேசும் தமிழக பாஜக தலைவர்கள்... கே.பி. முனுசாமி ‘அட்டாக்

மெர்சல் பற்றி ஆர்வ கோளாறில் பேசும் தமிழக பாஜக தலைவர்கள்... கே.பி. முனுசாமி ‘அட்டாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மெர்சல் திரைப்படம் பற்றி தமிழக பாஜக தலைவர்கள் ஆர்வ கோளாறில் பேசுவருகின்றனர் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சாடியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கே.பி. முனுசாமி கூறியதாவது:

KP Munusamy slams TN BJP on Mersal

மெர்சல் திரைப்படம் குறித்து தமிழக பாஜக தலைவர்கள்தான் ஆர்வ கோளாறில் பேசி வருகின்றனர். இதில் பிரதமர் மோடி எந்த செய்தியாளரிடமாவது வந்து மெர்சல் பற்றி கூறினாரா?

பிறகு எதற்கு மெர்சல் பட விவகாரத்தில் பிரதமர் மோடியை தொடர்பு படுத்த வேண்டும். தமிழகத்தில் அதிமுகவை வேறு ஒரு எந்த கட்சியுமோ அதன் தலைவரோ வந்து காப்பாற்ற வேண்டிய நிலைமை இல்லை.

அதிமுக அரசை பிரதமர் மோடி காப்பாற்றுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறார். அதிமுகவைப் பொறுத்தவரை எங்களுக்கு தந்தை எம்ஜிஆர்; அம்மா ஜெயலலிதாதான். அவர்கள்தான் எங்களுக்கு எல்லாமும்.

இவ்வாறு கே.பி. முனுசாமி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+