For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்ட மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிபதி பெயரை வெளியிடுங்கள் - கிருஷ்ணய்யர்

Google Oneindia Tamil News

Krishna Iyer wants judge in harassment case named
டெல்லி: பயிற்சிக்காக வந்த சட்ட மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதியின் பெயரை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில்,இளம் சட்ட மாணவிக்கு சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள விவகாரத்தை உச்சநீதிமன்றம் கையாளும் விதம் சரியில்லை.

இதுதொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் குழு முதலில் குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதியின் பெயரை வெளியிட வேண்டும். அவரது பெயரை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது கடமை, அது அவர்களது உரிமையும் கூட.

நீதிபதிகள் தாங்கள் வகிக்கும் பொறுப்பை உணர்ந்து, அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த நீதிபதிகள் குழுவே முதல்தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையையும் இன்னேரம் தொடங்கியிருகக வேண்டும். அதிலேயே இவர்கள் அடிப்படை தவறிழைத்துள்ளனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை சம்பந்தப்பட்ட நீதிபதியின் பெயரையே வெளியிடாமல் உள்ளனர். இது தவறானதாகும்.அடிப்படை கடமையிலிருந்து இந்த நீதிபதிகள் குழு தவறியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அவர்கள் ஏமாற்றத்தை அளித்துள்ளனர்.

பொதுவாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் முதலில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும். ஆனால் இதில்அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஏன் இந்த தவறு நடந்தது.

நாட்டில் நடக்கும் பிற பாலியல் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளில் நடந்த அடிப்படை விஷயங்களைக் கூட, அடிப்படை நடைமுறைகளைக் கூட நீதிபதிகள் குழு செய்யாதது ஆச்சரியம் தருகிறத என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Former Supreme Court judge turned politician V R Krishna Iyer has criticized the panel of judges in the apex court dealing with the case of a young law graduate who has accused a former SC judge of sexually harassing her. In an article, 'Sigmund Freud: Judges Proclivity', which appeared on the website of RSS organ 'Organizer', 99-year-old Iyer demanded the three judges name the culprit in this case and even the victim as it was the "public's right to know".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X