கே.ஆர்.எஸ் அணையில் நீர் திறப்பு 40,000 கன அடியாக குறைப்பு
மைசூர்: கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்ததால் கர்நாடக அரசு கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தமிழகத்துக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நீர் திறப்பு 40 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால், நேற்று கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு காவிரியில் 1.17 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், ஒக்கேனக்கல் பகுதியில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒக்கேனக்கல்லில் 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்தது. இதனால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 102 அடியைத் தாண்டியது. மேட்டூர் அணை 102 அடிகளைத் தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பின்னர், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து நீர் திறப்பு 80 ஆயிரம் கன அடி நீராகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை கே.ஆர்.எஸ். அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 80 ஆயிரம் கன அடியிலிருந்து 40 ஆயிரம் கன அடி நீராக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைந்தாலும் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து குறைந்தாலும் அணையிலிருந்து நீர் திறப்பது மேலும் குறைக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications