பழைய ஹிஸ்டரி தெரியுமா? கோலியால் முடியாததை செய்து காட்டிய "சைனா - மேன்" குல்தீப்.. என்ன நடந்தது?
தாக்கா: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் மிக சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். அவரின் பேட்டிங் பலரையும் கவர்ந்து உள்ளது.
இந்தியா வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டு நடந்து கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் திணறலாக ஆடிய இந்திய அணி நேற்று பாதி ஆட்டத்திற்கு பின் சுதாரித்தது.
இந்த நிலையில் இன்று அடிக்கப்பட்ட 50+ ரன்களையும் சேர்த்து வங்கதேசத்திற்கு எதிராக 404 ரன்களை எடுத்து உள்ளது. இந்த போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கூட செய்ய முடியாததை இந்தியாவின் டெயில் எண்டர்கள் செய்து காட்டி உள்ளனர்.

டாப் ஆர்டர்
இந்த போட்டியில் நேற்று பேட்டிங் இறங்கிய கே . எல் ராகுல் 22 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஒருநாள் போட்டி, டி 20 போட்டிகளில் சொதப்பி வரும் இவர் குறைந்தது டெஸ்ட் போட்டிகளிலாவது ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. டேய் பரமா அடிடா.. என்று சொல்லும் அளவிற்கு கேப்டனான அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வெறும் 22 ரன்கள் மட்டும் எடுத்து அவர் அவுட் ஆனார். இன்னொரு பக்கம் கில் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பெரும் நம்பிக்கையோடு இறங்கிய கோலியும் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

அவுட்
இதையடுத்து பார்ட்னர்ஷிப் போட்டு ஆடிய புஜாரா - பண்ட் கொஞ்சம் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். பண்ட் அதிரடியாக ஆடி 45 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். இவர் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அடித்தார். இன்னொரு பக்கம் புஜாரா 203 பந்துகளை பிடித்து 90 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 11 பவுண்டரிகளை புஜாரா அடித்தார். பண்ட் அவுட் ஆன பின் புஜாராவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷ்ரேயாஸ் 192 பந்தில் 86 ரன்கள் எடுத்தார். இதில் அவர் 10 பவுண்டரி அடித்தார்.

அஸ்வின்
இவர்கள் இருவரும் அவுட்டான பின் அஸ்வின் - குல்தீப் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். முக்கியமாக 113 பந்துகளை பிடித்த அஸ்வின் 58 ரன்களை எடுத்தார். இதில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்கள் அடக்கம். இன்னொரு பக்கம் கோலி கூட திணறிய டர்னிங் பிட்சில் குல்தீப் யாதவ் 114 பந்துகளை பிடித்து கெத்தாக நின்றார். 40 பந்துகளை எடுத்த இவர் 5 சிக்ஸர்களை அடித்தார். பிட்ச் அதிகமாக டர்ன் ஆகியும் கூட குல்தீப் இந்த பிட்சில் சிறப்பாக ஆடினார்.

புதிய பால்
பழைய பந்தில் பந்து அதிகமாக ஸ்பின் ஆகியும் கூட குல்தீப் அதை சிறப்பாக எதிர்கொண்டார். புதிய பந்தை எடுத்து பாஸ்ட் பவுலர்கள் வந்து பந்து வீசும் வரை குல்தீப் சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்தார். பாஸ்ட் பவுலர்கள் வந்த பின் கொஞ்சம் குல்தீப் திணறினார். அதேபோல் புது பந்தில் ஆடத்தான் குல்தீப் கொஞ்சம் திணறினார். இடதுகை ஸ்பின் பவுலர் தைஜூல் இஸ்லாம் ஓவரில் அதன்பின் அவுட் ஆனார். இன்று இவரின் ஆட்டம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

பிட்ச்
கடினமான பிட்சில் நன்றாக ஆடினார். 2016/17 போட்டிகளில் ரஞ்சி போட்டிகளில்தான் குல்தீப் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். அந்த சீசனில் உத்தர பிரதேச அணியின் டாப் விக்கெட் டேக்கர், டாப் ரன் கேட்டர் இவர்தான். இதுவரை முதல்தர டெஸ்ட் போட்டிகளில் 874 ரன்களை இவர் எடுத்து உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின் பிட்சுக்களில் நன்றாக பேட்டிங் செய்யும் இவர் இன்றும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications