நாங்க எப்பவுமே "கிங்" தான்... அன்றே அடித்துக் கூறிய குமாரசாமி
எங்கள் கட்சி கிங்காகவே இருக்கும், கிங் மேக்கராக இருக்காது என்று ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி கூறியது ஓரளவுக்கு பலித்து விட்டது.
Recommended Video

பெங்களூர்: எங்கள் கட்சி கிங்காகவே இருக்கும் என்றும் கிங் மேக்கராக இருக்காது என்றும் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி கூறியது ஏதோ ஒரு வகையில் பலித்துவிட்டது.
கர்நாடகத்தில் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளும், பின்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளும் மதசார்பற்ற ஜனதா தளம்தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் என்று கூறியிருந்தன.

கிங்தான்
ப்ரீபோல் கணிப்புகள் குறித்து குமாரசாமி கூறுகையில் இந்த கருத்து கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. இவை ஆளும் கட்சிக்கு சாதகமாகவே கூறும். எனவே எங்கள் செயல்பாடுகளின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. நாங்கள் கிங்காக இருந்து தனி பெரும்பான்மை அமைத்து ஆட்சி அமைப்போமே தவிர கிங் மேக்கராக இருக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.

பாஜக முன்னிலை
இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை முதலே தொடங்கியது. இதில் பாஜக முன்னிலை வகித்து வந்தது. இதனால் அக்கட்சிதான் யாருடைய தயவும் இல்லாமல் ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவியது.

திடீர் டுவிஸ்ட்
கர்நாடக தேர்தல் முடிவுகளில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது. அதன் படி எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் சோனியா காந்தி , மஜத தலைவர் தேவ கௌடாவை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் தங்களை ஆதரித்தால் குமாரசாமிதான் முதல்வராக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

குமாரசாமியின் வாக்கு பலித்தது
இந்நிலையில் குமாரசாமியின் வாக்கு பலித்து விட்டது. கிங்காக இருந்து ஆட்சியை பிடிப்போம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முதல்வராகவுள்ளார். ஏதோ ஒரு வகையில் அவர் கிங்தான் என்பதை நிரூபித்து விட்டார். அவரது கணிப்பு தெரிந்தோ தெரியாமலோ பலித்துவிட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications