24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்- காலரை தூக்கிவிடும் குமாரசாமி
24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: கர்நாடக முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ்- மஜத இரண்டும் இணைந்தன. ஆனால் குமாரசாமிதான் முதல்வர் என்று சோனியா உறுதியளித்தார். அதன்பேரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி.

ஆனால் ஆளுநர் வஜுபாய் வாலாவோ எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு எடியூரப்பாவுக்கு கடந்த வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகத்தில் முதல்வராக பதவியேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.
இந்நிலையில் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் குமாரசாமி முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு ஆளுநர் 15 நாட்கள் காலஅவகாசம் கொடுத்தார்.
எனினும் குமாரசாமி தனக்கு 15 நாட்கள் எல்லாம் வேண்டாம். உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் கர்நாடக முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்.
கர்நாடகா முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் நாளை டெல்லியில் சோனியா, ராகுல் ஆகியோரை சந்திக்கவுள்ளேன் என்றார் குமாரசாமி. கர்நாடக முதல்வராக குமாரசாமி வரும் 23-ஆம் தேதி பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கு வருகை தர வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேவகௌடா அழைப்பு விடுத்துள்ளார்.
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications