காவிரி: உச்சநீதிமன்றத்தில் முறையீடு.. நாடாளுமன்றத்தில் போராட்டம்.. கர்நாடக அனைத்து கட்சிகள் அதிரடி
Recommended Video

பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் உறுப்பினர்களாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கமிஷனர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில மத்திய அரசு அதிகாரிகள் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் நீர்வளத்துறை நிர்வாக செயலாளர் (பொறுப்பு), கேரள நீர்வளத்துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் மேம்பாட்டு கமிஷனர் அன்பரசு, தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் கோயல், காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2ம் தேதி டெல்லியில் கூட்டப்படுகிறது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில், பங்கேற்கிறார்கள். இதில், பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ள நிலையில், இன்று கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வர், குமாரசாமி தலைமையில் பெங்களூரில் உள்ள தலைமைச் செயலகமான விதானசவுதாவில் கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, அமைச்சர்கள், நீர்வளத்துறை சார்ந்த அதிகாரிகள், கர்நாடக மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட விதத்திற்கு பாஜக உட்பட அனைத்து கட்சிகள் சார்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில், விவாதம் நடத்திதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், அதை கர்நாடக அனைத்து கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி இணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
வாய்ப்பு இருந்தால், அரசியல் சாசன அமர்வில் மேல்முறையீடு செய்து காவிரி மேலாண்மை ஆணையத்தை தவிர்ப்பது. இவ்விரு முடிவுகளையும் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்துள்ளனர். கர்நாடக அரசுக்கு அனைத்து கட்சிகளும் இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்












Click it and Unblock the Notifications