அழுவாதீங்க.. கிரைப் வாட்டர் குடிங்க.. குமாரசாமிக்கு பார்சல் அனுப்பி பாஜகவினர் குசும்பு!
பொது மேடையில் கண்ணீர்விட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமியை கிண்டல் செய்யும் விதமாக பாஜக கட்சியினர் அவருக்கு கிரைப் வாட்டர் அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.
பெங்களூர்: பொது மேடையில் கண்ணீர்விட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமியை கிண்டல் செய்யும் விதமாக பாஜக கட்சியினர் அவருக்கு கிரைப் வாட்டர் அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.
கர்நாடக அரசியலில் தற்போது முதல்வர் குமாரசாமி கண்ணீர்விட்டதுதான் ஹாட் டாப்பிக். முதல்வர் பதவி என்பது ரோஜாப் பூ படுக்கை அல்ல என்றும் அவர் தெரிவித்து மேடையிலேயே அவர் கண்ணீர் வடித்தார்.

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார் குமாரசாமி. மக்களுக்காக சிவனைப் போல நானும் ஆலகால விஷத்தை விழுங்கி விட்டேன், நான் பதவியை விலக கூட தயார் என்று கூறி கண்ணீர் வடித்தார்.
அவரின் கண்ணீரை கிண்டல் செய்து பாஜகவினர் மீம்ஸ் போட்டு வந்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் கூட கிண்டல் செய்தனர்.
இந்த நிலையில் மண்டியா பகுதியை சேர்ந்த பாஜக கட்சியினர், குமாரசாமியின் கண்ணீரை வைத்து அவரை மோசமாக கிண்டல் செய்து இருக்கிறார்கள். மண்டியாவில் பாஜகவை சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து இந்த செயலை செய்துள்ளனர்.
அதன்படி மொத்தம் 6 கிரைப் வாட்டர் பாட்டில்களும், குழந்தைகள் பயன்படுத்தும் 6 விளையாட்டு பொருட்களையும் அனுப்பி இருக்கிறார்கள். இந்த சம்பவம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications