குமாரசாமிதான் கர்நாடகாவின் அடுத்த முதல்வர்.. காங்கிரஸுடன் கூட்டணி.. மம்தாவின் புதிய கணிப்பு!
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் ஜெடிஎஸ் கட்சியின் குமாரசாமி ஆட்சி அமைப்பார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டித்துள்ளார்.
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் ஜெடிஎஸ் கட்சியின் குமாரசாமி ஆட்சி அமைப்பார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை வந்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளின் படி, கர்நாடகாவில் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்படுகிறது. அதன்படி காங்கிரஸ், பாஜக, ஜெடிஎஸ் ஆகிய மூன்று கட்சிகளும் பெரும்பான்மை பெறாது. ஜெடிஎஸ் எந்த கட்சியை ஆதரிக்கிறதோ, அந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது.
ஜெடிஎஸ் பெரும்பாலும் பாஜகவை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான கூட்டணி வலைகளை மோடி, முன்பே பிரச்சாரத்தின் போது வீசினார். ஆனால் காங்கிரஸ் ஜெடிஎஸ்ஸின் தேவகவுடாவிற்கு எதிராக பேசி வந்தது. இதனால் காங்கிரஸ் ஜெடிஎஸ் கூட்டணி உருவாக வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதில் வித்தியாசமான கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பது உண்மைதான், ஆனால் இந்த முறை காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்க போவதில்லை. இந்த முறை கண்டிப்பாக ஜெடிஎஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும். தேவ கவுடாவின் மகன் குமாரசாமிதான் ஆட்சி அமைக்க போகிறார். அவர்தான் முதல்வராக இருப்பார் என்று கூறியுள்ளார்.
பாஜக எவ்வளவு முயன்றாலும், தென்னிந்தியாவில் ஆட்சி அமைக்கவே முடியாது. குமாரசாமி காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் மட்டுமே ஆட்சி அமைக்க போகிறார். காங்கிரஸ் தேவ கவுடாவிற்கு எதிராக பேசி இருக்க கூடாது. ஆனாலும் இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜெடிஎஸ் கூட்டணி உருவாக்கி பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications