ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் ரத்தம்: உலகில் முதன் முறையாக மக்களுக்கு கொடுக்கப்பட்டு சோதனை
ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்படும் ரத்தம், உலகின் முதலாவது மருத்துவ பரிசோதனையில் மக்களுக்கு கொடுக்கப்பட்டதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஒரு சில ஸ்பூன்கள் கொண்ட மிகவும் சிறிய அளவு ரத்தம் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டு, அது எவ்வாறு மனித உடலில் செயல்படுகிறது என்று பரிசோதிக்கப்பட்டது.
மொத்தமாக ரத்தப் பரிமாற்றங்கள் எப்போதுமே மக்களை சார்ந்தே இருக்கின்றன. அவர்கள் தொடர்ந்து ரத்த தானம் வழங்கி வருகின்றனர். ஆனால், மிகவும் அரிதான ரத்த வகைகளை தானமாக பெறுவது கடினமாக இருப்பதால் ரத்தம் தயாரிப்பதற்கான இறுதியான இலக்கு என்பது, முக்கியமானது.
சிக்கில் செல் அனீமியா (sickle cell anaemia)எனப்படும் உடல்நலக்கோளாறுக்கு தொடர்ந்து ரத்தம் தேவையை சார்ந்திருக்கும் மக்களுக்கு இதுபோன்ற முறை தேவைப்படுகிறது.
ரத்தம் துல்லியமாக பொருத்தமாக இல்லாதபட்சத்தில் உடலானது அதனை புறக்கணிக்கும். சிகிச்சையானது தோல்வியடையும். இந்த மட்டத்திலான திசு பொருத்தம் என்பது, மிகவும் நன்றாக அறிந்த ஏ, பி, ஏபி மற்றும் ஓ ரத்த வகைகளுக்கு அப்பாலும் செல்ல வேண்டும்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆஷ்லே டாய், சில ரத்த வகைகள் மிக,மிக அரிதாக இருக்கின்றன. நாட்டில் 10 நபர்கள் மட்டுமே இதனை தானமாக தரக்கூடிய நிலையில் இருக்கமுடியும் என்று சொல்கிறார்.
இந்த தருணத்தில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பாம்பே ரத்த வகையானது ஒட்டு மொத்த பிரிட்டனிலும் 3 யூனிட் மட்டுமே இருப்பு இருக்கிறது.

எவ்வாறு ரத்தம் வளர்த்தெடுக்கப்படுகிறது?
இது பிரிஸ்டல், கேம்பிரிட்ஜ், லண்டன் ஆகிய குழுக்கள் மற்றும் என்ஹெச்எஸ் ரத்தம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை இணைந்த ஆய்வு திட்டமாகும்.நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் இரத்த சிவப்பணுக்களில் இந்த ஆய்வு கவனம் செலுத்துகிறது. #
இது எவ்வாறு பணியாற்றுகிறது?
ஒரு பைண்ட் ரத்தம்(சராசரியாக 470 மிலி) என்ற அளவில் வழக்கமான தானத்தில் அவர்கள் தொடங்குகின்றனர்.
ஒரு ரத்த சிவப்பணுவாக மாறக்கூடிய திறன் கொண்ட நெகிழ்வான ஸ்டெம் செல்களை பிரித்தெடுக்க காந்த மணிகள் உபயோகிக்கப்படுகின்றன.
இந்த ஸ்டெம் செல்கள் ஆய்வகங்களில் பெரும் எண்ணிக்கையில் வளர்த்தெடுக்கப்படுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவை, ரத்த சிவப்பணுக்களாக மாற வழிகாட்டப்படுகின்றன.
இந்த செயல்முறைக்கு மூன்று வார காலம் ஆகும். 5 லட்சம் ஸ்டெம் செல்கள் எனும் தொடக்க தொகுப்பு, 50 பில்லியன் சிவப்பணுக்களாக கிடைக்கும்.
இது 15 பில்லியன் ரத்த சிவப்பணுக்களாக வடிகட்டி குறைக்கப்படும். இந்த முறைதான் இடமாற்றத்துக்கான சரியான வளர்ச்சி நிலையாகும். "எதிர்காலத்தில் எவ்ளவு சாத்தியமோ அவ்வளவு ரத்தத்தை நாங்கள் உருவாக்க விரும்புகின்றோம்.
என் தலைமையிலான நோக்கம், அறைமுழுவதும் இருக்கும் இயந்திரங்கள் தொடர்ந்து ரத்தம் தயாரித்துக் கொண்டே இருக்க வேண்டும்," என பேராசிரியர் ஆஷ்லே டாய் என்னிடம் தெரிவித்தார்.
முதலில் இரண்டு பேர் இந்த பரிசோதனையில் பங்கெடுக்கின்றனர். 10 ஆரோக்கியமான தன்னார்வலர்களிடமாவது ரத்தம் செலுத்தி பரிசோதிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். அவர்கள் நான்கு மாத இடைவெளியில் 5-10 மில்லி ரத்தம் இரண்டு முறை தானமாக பெறுவார்கள்.
ஒருமுறையில் வழக்கமான ரத்தமும், இன்னொரு முறையில் ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட ரத்தமும் அளிக்கப்படும். பெரும்பாலும் மருத்துவ நடைமுறைகளில் பயன்படுத்தப்படுவது போல இந்த ரத்தம் கதிரியக்கப் பொருள்களால் குறியிடப்பட்டிருக்கும். அப்போதுதான் விஞ்ஞானிகள் உடலில் எவ்வளவு காலத்துக்கு ரத்தம் நீடித்திருக்கிறது என்பதை கவனிக்க முடியும்.
வழக்கமான ரத்தத்தை விடவும், ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட ரத்தம் மிகவும் ஆற்றல்வாய்ந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ரத்த சிவப்பணுக்கள் பொதுவாக, அவை மாற்றப்படும் தேவைக்கு முன்பு 120 நாட்கள் நீடித்திருக்கும்.
வழக்கமாக தானமாக பெறப்பட்ட ரத்தம் இளம் மற்றும் பழைய ரத்த சிவப்பணுக்களைக் கொண்ட கலவையாக இருக்கும். ஆனால், ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்படும் ரத்த சிவப்பணுக்களானது முழுவதும் புத்தம் புதிதாக இருக்கும். எனவே அவை 120 நாட்கள் முழுவதும் நீடித்திருக்கும். இது எதிர்காலத்தில் அடிக்கடி சிறிய மற்றும் குறைவான அளவில் தானம் பெறுவதை அனுமதிக்கும் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
எனினும், கணிசமான நிதி மற்றும் தொழில்நுட்ப சவால்கள் இருக்கின்றன.
என்ஹெச்எஸ் நிறுவனத்தின் சராசரியான ரத்த தான செலவு 130 பவுண்ட் ஆகும். வளர்த்தெடுக்கப்படும் ரத்தம் அதிக செலவு பிடித்ததாக இருக்கும். எனினும் எவ்வளவு ஆகும் என்பதை ஆய்வு குழு தெரிவிக்கவில்லை.
சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் அவைகளாகவே காலாவதியாகி விடும் என்பது இன்னொரு சவாலாகும். இது வளர்த்தெடுக்கப்படும் ரத்தத்தின் அளவை கட்டுப்படுத்துகிறது. அது மருத்துவ ரீதியாக தேவைப்படும் அளவுகளில் உற்பத்தி செய்வதற்கு மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
என்ஹெச்எஸ் ரத்தம் மற்றும் ரத்த மாற்றுத்துறை மருத்துவ இயக்குனர், டாக்டர் ஃபரூக் ஷா கூறுகையில், சிக்கில் செல் போன்ற குறைபாடுகள் கொண்ட மக்களுக்கு பாதுகாப்பாக செலுத்த கூடிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கான அடித்தளத்தை இந்த உலகின் முன்னணி ஆராய்ச்சி கொண்டிருக்கிறது," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications