ஆக்சிஜன் திடீரென தடைபட்டதால் 4 நோயாளிகள் பலி... மருத்துவமனை ஊழியரின் அலட்சியத்தால் நேர்ந்த பரிதாபம்
தர்பங்கா : பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள வென்டிலேட்டரில் ஆக்சிஜன் திடீரென தடைபட்டு போனதால் 4 நோயாளிகள் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்பங்கா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலருக்கு வென்டிலேட்டர் மூலமாக ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டு வந்தது.

பணியின்போது ஆக்சிஜன் வாயு சப்ளை செய்யும் பொறுப்பில் இருந்த அம்லேஷ் பிரசாத் என்ற மருத்துவ உதவியாளர், நேற்று காலை தனது பணி முடிந்ததும், அந்த பொறுப்பை ஏற்கும் மாற்றுப் பணியாளர் வரும்வரை காத்திருக்காமல் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்று விட்டார்.
அதன்பின்னர் வென்டிலேட்டரில் திடீரென ஆக்சிஜன் தடைபட்டது. இதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். காலை 6 மணியில் இருந்து 9 மணிக்குள் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆடசியர் உத்தரவிட்டுள்ளார். பணியில் அலட்சியமாக இருந்த மருத்துவ உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications