லட்டு விற்பனையில் நஷ்டமாம்... விலையை உயர்த்தப் போகிறது திருப்பதி தேவஸ்தானம்
திருமலை: பிரம்மோச்சவத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் விலையை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவசமாகவும், சலுகை வகையிலும் கூடுதல் விலைக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதமும், ஒரு லட்டு ரூபாய் 10 வீதம் 2 லட்டுகளும் வழங்கப்டுகின்றன. மேலும் ரூபாய் 50, ரூபாய் 300 செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலவசமாக 2 லட்டுகளும் தர்ம தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ரூபாய் 10 வீதம் 2 லட்டுகளும் வழங்கப்படுகின்றன.
மேலும் கூடுதலாக தேவைப்படும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூபாய் 25க்கு வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 3 லட்சம் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு லட்டு தயாரிக்க ரூபாய் 38 வரை செலவாகும் என்றும் இதனால் லட்டு விற்பனை தொடர்ந்து நஷ்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி, "பக்தர்களுக்கு லட்டு பிரசாதத்தை தரமாகவும் குறைந்த விலையிலும் தடையின்றி வழங்கி வருகிறோம். இந்நிலையில் மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் லட்டு விலையை உயர்த்துவது குறித்து அறங்காவலர் குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும். வரும் 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவத்திற்கு பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications