கள்ளக்காதல் டவுட்.. ஊரையே மிரட்டிய பெண் ரவுடியை கொன்று 15 மாதம் நாடகம்! கணவன் - மகன் சைலன்ட் பிளான்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: 'பாப் ஹேர்கட்'.. ஆண்கள் போல் அசால்டாக ஆட்டோ ஓட்டும் திறமை.. அடிதடி, மிரட்டல், பணம் பறிப்பு உள்ளிட்டவற்றிலும் பங்கேற்பு.. இப்படி 11 குற்ற வழக்குகளுடன் 'லேடி' டான் ஆக வலம் வந்த மிண்டு சவுத்ரி. இவரை பார்த்து ஓட்டுமொத்த ஊரும் பயந்து நடுங்கிய நிலையில் கள்ளக்காதல் சந்தேகத்தால் அவரது கணவனும், மகனும் சேர்ந்து சைலண்ட்டாக கொன்று 15 மாதங்கள் வரை நாடகமாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

lady-don-killed-by-husband-and-son-police-arrested-both-after-15-months-in-rajasthan

அந்த பெண்ணின் உண்மையான பெயர் சீமா சவுத்ரி. ஆனால் அனைவரும் அவரை அழைப்பு மிண்டு சவுத்ரி (வயது 41). பிற பெண்களை போல் இவர் இருப்பது கிடையாது. நீண்ட கூந்தலுடன் இருக்க பல பெண்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் சீமா சவுத்ரிக்கு என்னவோ பிடித்தது 'பாப் ஹேர்கட்' தான். அதேபோல் சேலை அணிவது கிடையாது. ஆண்களை போல் சட்டை, பேண்ட்டில் தான் இருப்பார். குறிப்பாக ஆட்டோ ஓட்டுபவர் என்றால் காக்கி சட்டையில் தான் பெரும்பாலும் தோற்றமளிப்பார்.

சிறு வயதிலேய தாயை இழந்தவர். தந்தை மோதிராம் வளர்ப்பில் வளர்ந்தவர். ஜெய்ப்பூர் அருகே உள்ள மாதராம்புரா கிராமம் தான் சீமா சவுத்ரியின் சொந்த ஊர். தந்தை வேலைக்கு செல்வதால் மிண்டு சவுத்ரி சிறு வயது முதலே தவறான ஆட்களுடன் பழக தொடங்கினார். ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.

15 வயதில் ஆட்டோ ஒட்ட தொடங்கினார். அதன்பிறகு ரவுடிகளுடன் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட தொடங்கினார். பெண்ணாக பிறந்தாலும் கூட ஆண் போல் அவரது நடை, உடை, பாவணைகள் அனைத்தும் மாறின. கடந்த 2009ம் ஆண்டில் முதல்முதலாக அவர் மீது வழக்குப்பதிவானது. கடந்த 15 ஆண்டுகுளில் அடிதடி, வழிப்பழி, மிரட்டல் என்று மொத்தம் 11 வழக்குகள் பதிவாகின.

'லேடி டான்' ஆக வலம் வர தொடங்கினார். இவர் லாலா ராம் என்பவரை கரம்பிடித்தார். திருமணமான புதிதில் இருவரும் ஹேப்பியாக வாழ்ந்தனர். இந்த தம்பதிக்கு ஹரி ஓம் சவுத்ரி (வயது 20) என்ற மகன் உள்ளார். இதற்கிடையே தான் மிண்டு சவுத்ரிக்கும் அவரது கணவர் லாலா ராமுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர். மகன் ஹரி ஓம் சவுத்ரி தனது தாய் மிண்டு சவுத்ரியுடன் வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே தான் திடீரென்று மிண்டு சவுத்ரி மாயமானார். 2025 மே மாதம் மிஸ்ஸானார். இதுபற்றி அவரது மகன் ஹரி ஓம்-மிடம் குடும்பத்தினர் கேட்டனர். அதற்கு அவர் குற்ற வழக்கில் தனது தாயை போலீசார் கைது செய்து திஹார் சிறையில் அடைத்துள்ளனர் என்று கூறினார். அதேபோல் இன்னும் சிலரிடம் பாரத்பூர் ஜெயிலில் அடைத்துள்ளதாக கூறினார்.

இதற்கிடையே தான் மிண்டு சவுத்ரியின் சகோதரி ஒருவர் அவரை பார்க்க 2 சிறைக்கும் சென்றார். அப்போது அங்கு அவர் இல்லை என்பது தெரியவந்தது. இதுபற்றி அவர் மகன் ஹரி ஓம் சவுத்ரியிடம் தெரிவிக்க 2025 ஜூலை 21ம் தேதி தனது தாய் மாயமாகி உள்ளதாக முகானா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது மிண்டு சவுத்ரி பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே தான் கடந்த 23ம் தேதி முகானா போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. பாழடைந்த கிணற்றில் உடல் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் உடல் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவரை யாரோ கொலை செய்து உடலை பெட்ஷீட்டில் சுற்றி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசியிருப்பதும் தெரியவந்தது.

மேலும் அந்த பெண் உடலில் இருந்த துணியை வைத்து விசாரித்தபோது அது தான் 'லேடி டான்' மிண்டு சவுத்ரி என்பதும், அவர் மாயமாகவில்லை. அவரை கொன்று யாரோ கிணற்றில் வீசியிருப்பதும் தெரியவந்தது. முதற்கட்டமாக போலீசாருக்கு அவரது மகன் ஹரி ஓம் சவுத்ரி மற்றும் கணவர் லாலா ராம் ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் 2 பேரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அதாவது மிண்டு சவுத்ரி தனது மகன் ஹரி ஓம் சவுத்ரியை திட்டி அடித்து வந்துள்ளார். இதனால் அவர் தாய் மீது கோபமாகி உள்ளது. அதேபோல் லாலா ராமும் தனது மனைவி மிண்டு சவுத்ரிக்கு கள்ள உறவு இருக்கலாம் என்றும், இதனால் தான் தன்னை விட்டு பிரிந்து தனியாக வாழ்வதாகவும் நினைத்தார். இதனால் இருவரும் சேர்ந்து மிண்டு சவுத்ரியை கொல்ல நினைத்தனர்.

அதன்படி அவர்கள் 2025 கடந்த மே மாதம் மிண்டு சவுத்ரியின் கழுத்தை நெரித்து கொன்றனர். பிறகு அவர் வைத்திருக்கும் ஆட்டோவில் உடலை எடுத்து சென்று 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெட்ஷீட் சுற்றி வீசியதும் தெரியவந்தது. ஊரையே மிரட்டி அடிதடியில் ஈடுபட்டு வந்த பெண் ரவுடி மிண்டு சவுத்ரியை அவரது 20 வயது மகனும், கணவனுமே சேர்ந்து கொன்று உடலை கிணற்றுக்குள் வீசி 15 மாதங்களாக நாடகமாடி வந்த சம்பவம் ராஜஸ்தானை அதிர வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+