சென்னையிலிருந்து வந்த 'சாத்தான்'.. சீனிவாசன் மீது லலித் மோடி கடும் தாக்குதல்!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் நவீன காலத்து ராவணன், செனனையலிருந்து வந்த சாத்தான் என்று படு காட்டமாக விமர்சித்திருக்கிறார் ஐபிஎல் ஊழலுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து தப்பித்துப் போய் லண்டனில் பதுங்கியிருக்கும் லலித் மோடி.
உச்சநீதிமன்றம் சீனிவாசனுக்கு எதிராக அளித்துள்ள தீர்ப்பைத் தொடர்ந்து அதுகுறித்து லலித் மோடி கருத்து தெரிவித்துள்ளார். அதைப் பார்த்தால் கருத்து தெரிவித்தது போலவே இல்லை, காரித் துப்பியது போலவே ஒரு பீலிங்.
இதுகுறித்து லலித் மோடி டிவிட்டரில் கூறியுள்ளதாவது....

நவீன ராவணன்
நவீன காலத்து ராவணன் இந்த சீனிவாசன். இவர் ஒரு சாத்தான்.

அபாரமான தீர்ப்பு
உச்சநீதிமன்றம் சீனிவாசனுக்கு எதிராக பிறப்பித்த உத்த்தரவு அபாரமானது, வரவேற்புக்குரியது. உறுதியான தீர்ப்பு இது.

வெளியே பிடித்துத் தள்ளுங்கள்
உலக அளவில் கிரிக்கெட் நலம் பெற இது நன்மை பயக்கும். கடைசியில் சீனிவாசனை வெளியே பிடித்துத் தள்ள வழி பிறந்துள்ளது.

சென்னையிலிருந்து வந்த சாத்தான்
இந்திய கிரிக்கெட் வாரியத்தினர் இனியாவது சென்னையிலிருந்து வந்த இந்த சாத்தானை வெளியேற்ற வேண்டும்.

விரட்டியடியுங்கள்
அனைத்து அரசுத் துறையிலும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வரும் சீனிவாசனை விரட்ட வேண்டும்.

காத்திருக்கிறேன்
நவீன காலத்து ராவணன் வெளியேற்றப்பட்டார் என்ற செய்திக்காக இந்த வருடத்து தசராவை நான் எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன்.

ஆனா இவுரு மட்டும்..
இப்படி வாய்க்கு வாய் கழுவி ஊற்றியிருக்கும் இந்த லலித் மோடியே கோர்ட் தீர்ப்புகளை மதிக்காமல், சென்னையில் இவர் மீது குவிந்திருக்கும் பெரும் ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காமல் லண்டனிலேயே தொடர்ந்து ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications