அனுப்பிய சம்மனை அமலாக்கப்பிரிவுக்கே திருப்பிய லலித் மோடி வழக்கறிஞர்..
மும்பை : ஐ.பி.எல். முறைகேடு குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கக் கோரி லலித் மோடிக்கு அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை அவரது வழக்கறிஞர் திருப்பி அனுப்பி விட்டார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் ஒளிபரப்பு உரிமை தொடர்பாக வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப், மல்ட்டி ஸ்கிரீன் மீடியா இடையே 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உடன்பாட்டில், முன்னாள் தலைவர் லலித் மோடியும், வேறு சிலரும் ரூ.425 கோடி ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கில் லலித் மோடி 3 வார காலத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது.
இந்த சம்மன், மும்பையில் உள்ள அவரது வழக்கறிஞர் மெகமூத் எம். அப்டிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அந்த சம்மனை மத்திய அமலாக்க இயக்குனரகத்துக்கே திருப்பி அனுப்பி விட்டார்.
மோடியின் இங்கிலாந்து முகவரி, அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்திடம் உள்ளதாகவும், சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு சம்மனை அவரிடம்தான் அமலாக்க இயக்குனரகம் ஒப்படைக்க வேண்டும் என்றும் லலித் மோடி வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்த சம்மனை தான் பெற்றுக்கொள்வதற்கு லலித்மோடி அதிகாரம் வழங்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் முகமது அப்டி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications